"வெறும் காற்றடைத்த பையடா" என உடலை ஒரு பொருட்டே அல்ல என்று சொல்ற சித்தர்கள்தான் அதை எப்படி பாதுகாப்பாக வைச்சிருக்கனும் என்றும் நமக்கு சொல்லிக் கொடுத்திருக்காங்க.
நல்லா சாப்பிடு, நல்லதே சாப்பிடு அப்படி என்றால் அது மட்டும் ஆரோக்கியம் இல்லை அதற்கான சில வழிமுறைகளையும் சில கட்டுப்பாடுகளையும் நமக்கு அவங்க சொல்றாங்க...
- சாப்பிடும் போது தண்ணீர் குடிக்கக்கூடாது
- கண்ணில் தூசி விழுந்தா கசக்காதே: கண்ணுல தூசி விழுந்தா கண்களை கசக்கக்கூடாது
- சிறுநீர் மலம் இரண்டையும் அடக்காதே: சிறுநீர் மலம் கழிப்பதை எப்போதுமே கட்டுப்படுத்தி வைக்க கூடாது, இதுதான் உடலில் அதிக பாதிப்புகளை உண்டுபண்ணும்.
- கண்ட இடத்திலும் எச்சில் உமிழாதே.
- காதை குத்தி குடைய கூடாது: இதுவும் கூட ஒரு கெட்ட பழக்கம் தான். காது குத்தி குடையக்கூடாது. இந்த செயலால் காது கேட்காமல் கூட போக வாய்ப்பிருக்கு.
- வாயை திறந்து மென்று சாப்பிடக் கூடாது.
- உட்காரும் போது நிமிர்ந்து தான் உட்கார வேண்டும் அப்படியில்லையென்றால் வலியை உண்டுபண்ணி எலும்புகள் பலவீனமாகி விடும்.
- வெற்றுத் தரையில் உறங்காதே: வெறும் தரையிலே நாம படுக்கும்போது நரம்பு அல்லது இரத்தமோ பாதிக்கப்படும்
- கொதிக்க கொதிக்க குடிக்காதே: அதிக சூடான காபியை, தண்ணியை குடிக்க கூடாது. அது நம்ம உணவு குழாய்களை பாதிக்கும்.
- நகத்தை நீட்டி வளர்க்காதே: நகம் அதிகமா இருந்தா அதுல சேரும் அழுக்கு நாம சாப்பிடும்போது உணவோடு வயிற்றுக்குள்ளே சென்று தொற்றுவியாதி உண்டுபண்ணி விடும்.
- பல்லில் குச்சி வைத்து குத்தாதே: உணவுப் பொருட்கள் பல்லில் மாட்டிக் கொண்டால் குச்சி வைத்து குத்துவதால் ஈறுகள் பலவீனமடைந்து சேதாரம் ஏற்பட்டு பற்கள் விழ ஆரம்பிச்சுடும்.
- எந்த சூழ்நிலையிலும் பசிக்காம சாப்பிடறது ரொம்பவே தப்பு. ஒரு தவறான செயலும் கூட.
- பசித்தால் நேரம் கடந்ததே: பசி வந்தால் உடனே சாப்பிட வேண்டும். இல்லாட்டி அதனால வயிற்றுப்புண், அஜீரணக்கோளாறு ஏற்படும்.
- வயிறு முட்ட சாப்பிடக் கூடவே கூடாது.
பிரண்ட்ஸ் இந்த Tips உங்களுக்கு ரொம்பவே பயனுள்ளதாக இருந்தா Share பண்ணுங்க..