கோடை வெயிலில் குழந்தைகளை பாதுகாக்க அறிவுரைகள்:
கோடை விடுமுறை நாட்களில் வெயில் தாக்கத்தால் பிள்ளைகள் அவதிப்படுவார்கள் அதிலிருந்து எவ்வாறு பாதுகாப்பது என
மருத்துவர்கள் கூறும் அறிவுரைகள் இவை.
- மிகவும் சூடாக அல்லது மிகவும் குளிர்ந்த உணவுகளை சாப்பிட கூடாது.
- ஐஸ் கிரீம் வாங்கி தந்து சாப்பிட வைப்பதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் பாக்டீரியா தொற்று ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.
- நீரை சூடாக பருகாமல் கொதிக்க வைத்து சூடு ஆறிய நீரையே பருக வேண்டும்.
- காலை மாலை இரண்டு வேலையும் குளிக்க சொல்ல வேண்டும்.
- பகல் வெயில் நேரங்களில் விளையாட அனுமதிக்காதீர்கள்.
உடை மற்றும் உணவு இரண்டிலும் கவனிப்பாக இருந்தால் குழந்தைகளை கோடை வெய்யில் தாக்கத்திலிருந்து பாதுகாக்கலாம்.