Type Here to Get Search Results !

பெண்களின் மாத தொல்லை வெறும் உடல் கூறு விசயம்தானா? - கருத்து சிந்தனை

0
Pengal maadha periods problem kurittha karutthu sindhanai, Pengalin maadha thollai verum udal kooru visayam mattumthaana?, ladies 3 days problem details in tamil, பெண்களின் மாத தொல்லை
இன்று வழக்கம் போல பெண்களின் மாத தொல்லை ஒரு உடல் கூறு விசயம்தான் என்று ஒருவர் எழுதி இருந்தார்...

ஒவ்வொரு பெண்ணின் கர்பத்தில் உற்பத்தி ஆகும் சினை முட்டைக்கும் மிக அதீத ஆக்ரஷ்ண சக்திகள் இருப்பதால் மனிதனின் ஜீவன்கள்....இந்த பூமியில் ஈர்க்கப்பட்டு மனித பிறப்பு உருவாகின்றன ..

உயிர் உடலுடன் சேரும் இந்த பெண்ணின் கர்ப்பம் எவராலும் ஊடுருவ முடியாத தன்மை காரணமாக கற்பக்ரஹம் என்பதாக புனித பெயர் கொண்டது.

கர்மவினை கொண்ட அந்த ஜீவன் ... உங்கள் குடும்பத்தில் உங்கள் மூதாதையரால் நிச்சியக்கப்பட்டால் மட்டும் அந்த குடும்ப கற்பத்தில் நுழையும் தன்மை கொண்டது ...

உங்க ஈமெயிலில் உள்ளே அடுத்தவர் நுழைவது எப்படி கடினமோ அதை விட பல கோடி கடுமையானது .. வெளி ஒரு ஜீவன் உங்கள் குடும்பத்தில் பிறப்பது ....

கோவில்க ற்பக கிரகம்.... அதே போல எந்த ஒரு தெய்வத்திற்கு உண்டானதோ அதை தவிர வேறு எதுவும் உள்ளே புக முடியாது என்பதாலே அதற்கு அந்த பெயர் !!!

ஒரு உயிர் நுழையும் முன்பாக உருவான சினை முட்டை ஒரு அணுபூர்வமான ஒரு உயிர் அற்ற பிணம்தான் ..

ஆணினின் வித்து சேராத அந்த உயிர் அற்ற பிணம் வெளியேறும் பொது பல வித தேவை யற்ற சக்திகளால் ,,,, துர் மரணங்களால் உடல் இழந்த ஜீவன்களால் ...பீடிக்கப்படும் .... தொடர்ந்து அதை வெளிபடுத்தும் பெண்ணின் மன ஓட்டங்களை பாதிக்கும் ..

தீட்டு என்பது ... தீமையான சக்திகள் நம்மை அணுகாமல் அமைதி காத்து இருப்பது .. இது பெண்களுக்கு அவர்களது மாதவிலக்கு அன்று கடைபிடிக்க வேண்டியது ..

அதேதான் நமது நெருங்கிய உறவினர்கள் இறப்பும் .. நீங்கள் உருவாகிய உடலின் ஒரு பகுதிதான் உங்களின் உறவினர் உறவாகிய உடம்பும் அது மரிக்கும் பொது நீங்கள் அமைதி காத்து இருப்பது தான் தீட்டு காத்தல் ..

இரண்டும் பிணம்தான் ... இன்று உயிர் இருந்து பிரிந்தது .. மற்றது உயிர் உள்ளே வராமல் இறந்தது .. அவ்வளவே .. இதில் ..அந்த பெண்ணுக்கு மட்டும் தீட்டு .. உறவினர் பிணத்துக்கு நாம் அனைவருக்கும் தீட்டு ..

மாதமாதம் ஒரு மனித உடலை உருவாக்கி உயிர் இணையாமல் அதை நீக்கி வாழும் ஒரு பெண்ணிற்கு நீண்ட அமைதியான ஓய்வு தேவை .. அது உடல் மட்டும் அல்ல மனதும்தான் ..

மனித குலத்தையே உருவாக்கி காக்க வந்த பெண்களை .. அவளை விட வெறும் உடல் வலிமை கொண்ட ஆண்கள் செய்யும் வேலையை செய்வது இணை என்றும் சமுத்துவம் என்று பேசி .. சிறுமை படுத்துவதாக எனக்கு படுகிறது...

விஜயராகவன் கிருஷ்ணன்

கருத்துரையிடுக

0 கருத்துகள்