சிலரால் அழுகையை கட்டுப்படுத்த முடியாது, சிலரால் சிரிப்பதை நிறுத்த முடியாது. சிலருக்கு படுத்தால் உறக்கம் வராது, சிலருக்கு வேலை செய்யும் போதெல்லாம் உறக்கம் வரும். இப்படி பல விஷயங்களை பலர் எப்படி கட்டுப்படுத்துவது என தெரியாமல் திண்டாடுவார்கள்.
நமது உடலை, நமது உணர்வுகளை, நமது உறக்க நிலையை, அவசரமாக வரும் சிறுநீர் முதற்கொண்டு பலவற்றை சின்ன சின்ன ட்ரிக்ஸ் மற்றும் ஹேக்ஸ் மூலம் நாமே கட்டுப்படுத்தலாம். அது எப்படி என இனி காணலாம்..
- ஆழ்ந்த தூக்கம் வராமல் தவிப்பவரா நீங்கள், உறங்க வேண்டி படுத்த பிறகு, உங்க இமைகளை வேகமாக இமைத்தால் ஒருசில நிமிடத்தில் உறக்கம் வந்துவிடும்.
- குளித்து முடிக்கும் போது, ஷவரில் குளிர் நீரை திருப்பிவிடுங்கள். இந்த குளிர்ந்த நீர், சருமத்தில் இருக்கும் நுண் துளைகளை மூடிவிடும். இதனால் பாக்டீரியா, அழுக்கு சேர்வதை தடுத்து, பருக்கள் அதிகரிக்காமல் காக்கலாம்.
- சிறுநீரை அடக்க முடியாமல் தவிக்கும் போது, அருகே பாத்ரூமும் இல்லை என்றால், ஏதாவது உங்களுக்கு பிடித்த திண்பன்டத்தை சுவைப்பது போல் என்ன துவங்குங்கள். உங்கள் மூளையை திசைத்திருப்பி, சற்று நேரம் சிறுநீர் அவசரத்தின் அழுத்தத்தை கட்டுப்படுத்த முடியும்.
- உறங்க செல்வதற்கு முன்னர் நீங்கள் படிக்கும் விஷயம், அதிகாலையில் அதிகமாக ஞாபகத்தில் வைத்திருப்பீர்கள்.
- உங்கள் நாக்கை பற்களின் பின் புறம் உறுதியாக வைப்பதால், தும்மலை தடுக்க முடியும்.
- படுத்த பிறகும் உறக்கம் இல்லாமல், மயக்க நிலையில் மட்டுமே நீங்கள் இருக்கிறீர்கள் எனில், ஒருகாலை மட்டும் தரையில் படுபடி வையுங்கள். நல்ல உறக்கம் வரும்.
- ஒற்றை தலைவலி இருந்தால், உங்கள் கைகளை குளிர்ந்த நீரில் வையுங்கள். இது, ஒற்றை தலைவலி குணமாக செய்யும்.
- கொசு கடித்த இடத்தில் தொடர்ந்து அரித்துக் கொண்டே இருக்கிறதா? கொசு கடித்த இடத்தில் டியோடிரன்ட் தடவினால், அரிப்பை தடுக்க முடியும்.
- முக்கியமாக வேலை செய்துக் கொண்டிருக்கும் போது தூங்கி, தூங்கி விளுகிரீர்களா? நன்கு மூச்சை இழுத்து, எவ்வளவு நேரம் முடியுமோ, அவ்வளவு நேரம் மூச்சை அடிக்கி , வெளிவிடுங்கள். தூக்கத்தை தடுக்க முடியும்.
- அடக்க முடியாமல் சிரித்துக் கொண்டே இருக்கிறீர்களா? உங்களை நீங்களே கிள்ளி கொள்ளுங்கள். சிரிப்பு நின்றுவிடும்.
- மிகுந்த சோகத்தில் இருக்கும் நேரத்தில், எதையாவது எழுதி வையிங்கள். சோகம் குறைந்து, இலகுவாக உணர்வீர்கள்.
- மிகுந்த மூக்கடைப்பு இருந்தால், உறங்கும் போது அருகே ஒரு வெங்காயம் வைத்துக் கொண்டு உறங்குங்கள். காலை மூக்கடைப்பு சரியாடுகிவிம்.
- தொண்டையில் கிச்சுகிச்சு மூட்டுவது போன்ற உணர்வு உண்டாகிறதா? உங்கள் காதை இதமாக தேய்த்துக் கொடுங்கள், இந்த உணர்வு நின்றுவிடும்.
- அழுகையை அடக்க வேண்டுமா? உங்கள் கண்களை அகல விரித்து, இமைக்காமல் வைத்திருங்கள் அழுகை நின்று விடும்.
Social Plugin