ஆடி மாதத்தில் அம்மனுக்கு கூழ் ஊற்றுவதன் காரணம்:
ஆடி மாதம் பூமாதேவி அவதரித்த மாதமாகவும்
கூறப்படுகிறது.
கிராம தெய்வங்களுக்கு ஆடி மாதத்தில் சிறப்பு
வழிபாடுகள் நடத்துவதும், கோயில்களில் கூழ்
ஊற்றுவதும் வழக்கம்.
சூரியன் தன் கதிர்வீச்சு திசையை ஆறு மாதங்களுக்கு
ஒருமுறை மாற்றுகிறது.அதன்படி ஆடி மாதத்தில்
சூரிய கதிர்கள் திசை மாறுகிறது.
இந்தியாவைப் பொறுத்தவரை உஷ்ணம் நிறைந்த
கோடைக் காலம் ஈரப்பதம் நிறைந்த குளிர்காலமாக
மாறுகிறது. இத்தருணத்தில் வைரஸ் போன்ற
கிருமிகளால் ஏற்படும் நோய்கள் அதிக அளவில்
பரவும் என்பது அறிவியல் சொல்லும் செய்தி.
அதன்படி ஆடி மாதத்தில் சின்ன அம்மை தட்டம்மை
அதிக அளவில் பரவும் அப்படி வரக்கூடிய கிருமிகளுக்கு
நோய் எதிர்ப்புச் சக்தியை கொடுப்பதற்கே கேழ்வரகு
கூழ் ஊற்றும் வழக்கத்தை ஏற்படுத்தியுள்ளனர்.
இந்தக் கூழ் உடலை குளிர்விக்கும் இரும்பு, கால்சியம்
மற்றும் நார்ச்சத்து கொண்டது. அம்மைகளில் இருந்து
காக்கும் மாரியம்மனை வணங்கி கூழ் ஊற்றுவதன்
மூலம் உஷ்ணத்தில் இருந்து உடம்பை காக்கலாம்.
மேலும் கூழ் பானையைச் சுற்றி மஞ்சளும்
வேப்பிலையும் வைப்பார்கள் வேப்பிலையும், மஞ்சளும்
கிருமி நாசினி. நோய் பரவாமல் தடுக்கும் நம்
முன்னோரின் பழக்கங்கள் கண்மூடித்தனமானவை
அல்ல. அர்த்தமுள்ளவை என்பதை இதன் மூலம் அறியலாம்.
ஆடி மாதத்தில் 18ம் நாள் ஆடிப்பெருக்கு
கொண்டாடப்படுவதற்கும் ஓர் ஐதிகம் உண்டு.
ஆடி மாதத்தில் காவிரி ஆறு பிரவாகமாக காட்சி தரும்.
காவிரி அம்மன் மசக்கை கொண்டிருப்பதான ஐதிகப்படி
ஆடி பதினெட்டம்நாள் சித்ரான்னங்கள் தயாரித்து
நிவேதனம் செய்யப்படும்.
அன்றைய தினம் காவேரி அன்னைக்கு கருகமணி,
காதோலை, மஞ்சள், குங்குமம், விளக்கு ஆகியவற்றை
சமர்ப்பித்தால் வாழ்க்கை ஆரோக்கியமாகவும், செல்வ
செழிப்போடும் அமையும் என்பது நம்பிக்கை.
-
--------------------------------------
- வி. திவாகரன், திருவாரூர்
குமுதம் பக்தி செய்திகள்:
Social Plugin