Type Here to Get Search Results !

கோடையில் வீட்டை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளும் வழிகள் !

கோடையில் ஏசியின் உதவியில்லாமல் வீட்டை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளும் வழிகள்! - இயற்கையாகவே வீட்டை எப்படி குளிர்ச்சியுடன் வைத்துக் கொள்வது?


கோடை வெயில் கொளுத்திக் கொண்டிருக்கிறது. என்ன தான் வெளியே சுற்றாமல் வீட்டிலேயே இருந்தாலும், கோடை வெயிலின் தாக்கத்தை நன்கு உணர முடிகிறது. அதிலும் கடலோர மாவட்டங்களில் வெயில் குறைவாக இருந்தாலும், அனல் காற்றினால் வீட்டில் கூட இருக்க முடியவில்லை.

அதனால் பலரும் ஏசி வாங்க நினைப்பார்கள். இருப்பினும் ஏசியும் உடலுக்கு நல்லதல்ல என்பதால் இயற்கையாகவே வீட்டை எப்படி குளிர்ச்சியுடன் வைத்துக் கொள்வது என்று பலரும் வழிகளை தேடிக் கொண்டிருக்கின்றனர்.
kodaiyil veetai kulumaiyaaga vaithirukka udhavum vazhigal, tips to cool house in summer, veetai kulira seiyya, Ways To Keep Your Home Cool Without Air Conditioning, how to keep house cool in summer naturally, கோடை வெப்பத்தைச் சமாளிக்க, தணிக்க kodai kala tips, kodai veyyil, veyil, iyarkai
ஆகவே  ஏசி இல்லாமலேயே வீட்டை குளிர்ச்சியுடன் வைத்துக் கொள்வதற்கான வழிகளைக் படித்து முயற்சித்து கோடை வெயிலின் அனலில் இருந்து தப்பித்துக் கொள்ளுங்கள்.

வீட்டிற்குள் திரைச்சீலை
வீட்டிற்குள் காற்று வரட்டும் என்று திரைச்சீலைகளை நீக்கிவிட்டு, கோடையில் ஜன்னல் கதவுகளைத் திறந்து வைக்காதீர்கள். இதனால் வீட்டில் அனல் காற்று தான் அதிகரிக்கும். மாறாக அனல் காற்று வீட்டினுள் வராதவாறு சற்று வெளிர் நிற காட்டன் திரைச்சீலைகளைப் பயன்படுத்துங்கள். இதனால் அனல் வீட்டினுள் வராமல் இருக்கும்.

மின்சாரத்தை வீண் செய்ய வேண்டாம்
வீட்டில் பகல் நேரத்தில் தேவையில்லாமல் லைட், தொலைக்காட்சி போடுவதைத் தவிர்க்கவும். இதனால் வீட்டினுள் வெப்ப அளவு தான் அதிகரிக்கும். மற்றும் மின்சார பலகையில் ப்ளக் மாட்டி ஆன் செய்து இருந்தால், அதனை அணைத்துவிட வேண்டும்.

காற்றை வெளியேற்றும் விசிறி
வீட்டின் சமையலறை மற்றும் படுக்கை அறையில் காற்றை வெளியேற்றும் விசிறியைப் பொருத்திக் கொள்ளுங்கள். இதனால் வீட்டினுள் சுற்றும் வெப்பக் காற்றை அந்த விசிறி வெளியேற்றி, அறையை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளும்.

வீட்டைத் துடைக்கவும்
உங்களுக்கு மாட்டுச்சாணம் கிடைத்தால், அதனை நீரில் கரைத்து, அந்நீரால் வீட்டைத் துடைக்கவும். இதனால் வீடு குளிர்ச்சியுடனும், கிருமிகளின்றி சுத்தமாகவும் இருக்கும். மாட்டுச்சாணம் கிடைக்காவிட்டால், ஒரு நாளைக்கு காலை, மாலை என இரு வேளை வீட்டை நீரால் துடையுங்கள்.

இரவு ஜன்னலை திறந்து வையுங்கள்
பகலில் ஜன்னலை மூடி வைத்தும், மாலை மற்றும் இரவு நேரங்களில் ஜன்னலைத் திறந்தும் வையுங்கள். இதனால் வீட்டினுள் காற்றோட்டம் அதிகரித்து, வீடு குளிர்ச்சியுடன் இருக்கும்.

தண்ணீர்
படுக்கை அறை குளிர்ச்சியுடன் இருக்க, இரவில் படுக்கும் போது டேபிள் மின்விசிறியின் முன் அகலமான பாத்திரம் அல்லது ஒரு வாளியில் நீரை வையுங்கள். இதனால் அறை நன்கு குளிர்ச்சியுடன் இருக்கும்.

உடல் வெப்பத்தைக் குறையுங்கள்
வீட்டை மட்டும் குளிர்ச்சியுடன் வைத்துக் கொண்டால் போதாது. நம் உடலையும் குளிர்ச்சியுடன் வைத்துக் கொள்ள வேண்டும். அதற்கு தண்ணீர், பழச்சாறுகளை அதிகம் பருகுவதோடு, வெயிலில் சுற்றுவதைத் தவிர்க்க வேண்டும்.
kodaiyil veetai kulumaiyaaga vaithirukka udhavum vazhigal, tips to cool house in summer, veetai kulira seiyya, Ways To Keep Your Home Cool Without Air Conditioning, how to keep house cool in summer naturally, கோடை வெப்பத்தைச் சமாளிக்க, தணிக்க kodai kala tips, kodai veyyil, veyil, iyarkai