Type Here to Get Search Results !

கழுத்தில் ஏற்படும் கருமை நிறத்தை போக்கணுமா? இதோ எளிய வழிகள் ஏராளமாய் இருக்கு

கழுத்தில் உள்ள கருமையை நீக்க | கழுத்தில் உள்ள கருவளையம் மறைய | கழுத்து கருமை நீங்க

கழுத்தில் ஏற்படும் கருமை நிறத்தை போக்க எளிய வழிகள், கழுத்து கருமையை போக்கணுமா? எளிய வழிகள்


சிலருக்கு செயின் போட்டு, அதனால் பின் கழுத்து கருத்துப் போய் இருக்கும்.

முகம் அழகாக இருப்பது எவ்வளவு முக்கியமோ அந்த அளவுக்கு கழுத்து அழகாக இருப்பதும் அவசியம். சிலரது முகம் பளபளப்பாய் டாலடிக்கும். ஆனால் கழுத்தைச் சுற்றி இருக்கும் கருமை மனதிற்கு சங்கடத்தை ஏற்படுத்திவிடும். வெயிலில் அலைவது கூட இதற்கு காரணமாக இருக்கலாம். அதனால், முகத்திற்கு பயன்படுத்தும் மேக்-அப்பை கழுத்து பகுதிக்கு சேர்த்துப் போடுவது நல்லது. கழுத்து கருமை நிறம் மறைய சில எளிய வழிமுறைகள் இதோ..
get rid of black neck tips, Natural remedies for black marks around neck, iyarkai vazhigal, kazhutthu karuppu niram pokka vazhigal, கழுத்தில் உள்ள கருமையை நீக்க | கழுத்தில் உள்ள கருவளையம் மறைய | கழுத்து கருமை நீங்க, kaluthu karuppu neenga, neck beauty tips/neck black remove tips beauty,tips,tamil, அழகு,குறிப்புகள்

* எலுமிச்சையானது இயற்கை பிளீச் ஆக செயல்படுகிறது தினசரி குளிப்பதற்கு அரை மணி நேரம் முன்பாக கழுத்தின் கருமை பகுதிகளில் எலுமிச்சை சாற்றினை தடவி ஊறவைக்கவும். பின்னர் குளிக்க கழுத்தின் கருமை படிப்படியாக மறையும்.

* கோதுமை மாவு, ஓட்ஸ் பவுடர், பாசிப்பயறு மாவு - இந்த மூன்றையும் சமமாக எடுத்து பாலுடன் திக்காக குழைத்துக் கொள்ளவும். அதை கழுத்தில் தடவி சில நிமிடங்கள் மசாஜ் செய்து 20 நிமிடம் அப்படியே விட்டு விடுங்கள். பிறகு கழுவிக் கொள்ளவும்.

* முகத்தையும், கழுத்தையும் அழகாக பளிச் தோற்றத்துடன் மாற்றும் சக்தி பால்பவுடருக்கு உண்டு. ஒரு டீஸ்பூன் பால் பவுடர், ஒரு டீஸ்பூன் தேன், ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறு. அரை டீ ஸ்பூன் பாதம் எண்ணெய் கலந்து கலந்து பசை போல கலக்கவும். இந்த கலவையை முகம், கழுத்து பகுதிகளில் அப்ளை செய்யவும். 15 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவிவிடலாம். வாரம் ஒருமுறை இதுபோல் பேக் போட முகமும், கழுத்தும் பளிச் ஆகும்.

* பப்பாளிபழத்தின் தோல், எலுமிச்சை பழத்தோல், ஆரஞ்சு பழத்தோல் - இதில் ஏதாவது ஒன்றை நன்றாக அழுத்தி கழுத்தில் தேய்த்து வந்தால் படிப்படியாக கருமை நிறம் மறையும்.

* முட்டைக்கோஸை அரைத்து அந்த சாறையும் கருப்பாக நிறம் மாறிய கழுத்தில் தேய்க்கலாம். இதனுடன் சிறிது தேன் அல்லது எலுமிச்சை சாறு கலந்து தேய்ப்பது கழுத்து கருமையை போக்குவதோடு மினுமினுப்பையும் தரும்.

* கழுத்தின் கருமையை போக்குவதில் உருளைக்கிழங்கு சிறந்த பிளீச் ஆக செயல்படுகிறது. உருளைக்கிழங்களை தோல் நீக்கி சீவி எடுத்துக்கொள்ளவும். அதை கழுத்துக் கருமை உள்ள பகுதிகளில் தேய்க்கலாம். பின்னர் அரை மணிநேரம் கழித்து குளிக்க கருமை படிப்படியாய் மறையும்.

* பயத்த மாவு, ஆலீவ் ஆயில், ரோஸ் வாட்டர் இவற்றை ஒன்றாக கலந்து கழுத்தில் பூசினாலும் கருமை நிறம் படிப்படியாக மறையும்.

* கழுத்து கருமையை போக்க சிறிது பால், தேன், எலுமிச்சை சாறு கலந்து கழுத்தில் தடவி 10 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் அலசி விடவும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் கழுத்து நிறம் படிப்படியாக மாறுவதை காணலாம்.

* தக்காளியை நன்றாக மசித்து அதனுடன் சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து கழுத்து கருமை பகுதிகளில் அப்ளை செய்யவும். எளிமையான இந்த வைத்தியத்தை தினசரி செய்து வர சில வாரங்களில் கழுத்துக் கருமை சரியாகும்.

* ஆரஞ்சு சுளையை எடுத்து அதனுடன் பன்னீர் அல்லது பால் கலந்து அப்ளை செய்யவும். 15 முதல் 20 நிமிடம் ஊறவைத்து கழுவினால் கழுத்துப்பகுதி பளிச் என்று மாறும். இனி கழுத்து கருப்பா இருக்கேன்னு இனி கவலைப்படாதீங்க! நிபுணர்கள் கூறிய இந்த ஆலோசனைகளை பின்பற்றுங்க கருப்பு போயே போயிடும்.

get rid of black neck tips, Natural remedies for black marks around neck, iyarkai vazhigal, kazhutthu karuppu niram pokka vazhigal, கழுத்தில் உள்ள கருமையை நீக்க | கழுத்தில் உள்ள கருவளையம் மறைய | கழுத்து கருமை நீங்க, kaluthu karuppu neenga, neck beauty tips/neck black remove tips beauty,tips,tamil, அழகு,குறிப்புகள்