Type Here to Get Search Results !

கோபத்தை உடனடியாக குறைக்க உதவும் வழிகள்..!

கோபத்தை குறைக்கும் வழிகள் - கோபத்தை உடனடியாக அடக்க உதவும் 11 வழிகள் ..
கோபம், ஒவ்வொரு மனிதருக்கும் உள்ள உணர்வுதான். ஏமாற்றத்தின் வெளிப்பாடே கோபமாக வெளிப்பாடே கோபமாக வெளியாகிறது.கோவம், உங்கள் உடலையும், மனதையும் மட்டுமல்ல நல்ல உறவுகளையும் கூட கொல்லும்.
கோபத்தை அடக்க, கோபம் (Anger), கோபத்தை வெல்லுங்கள், கோபம் குறைய வழிகள், கோபம் வந்தால், கோவம், கோபத்தின் விளைவுகள், kobam kuraiya, kovathai kuraiya tips, how to control anger in tamil
 ப்போதெல்லாம் உங்களுக்குக் கோபம் வரும்? காலை உணவை வாயில் வைக்க முடியாதபோது? கொடுமையான டிராஃபிக்கில் மாட்டிக்கொள்ளும்போது? அலுவலகத்தில் உங்கள் மேலதிகாரி உங்களைத் திட்டும்போது? உங்கள் குழந்தைகள் நீங்கள் சொல்வதைக் கேட்காதபோது? இன்னும் பல காரணங்கள் இருக்கலாம். கோபப்படாத மனிதரென்று யாராவது உண்டா? நிச்சயம் இல்லை. ஆனால், அது நம் கட்டுப்பாட்டை மீறிச் சென்றுவிட்டால் அதன் விளைவுகள் ஆபத்தானவை. அப்படிப்பட்ட கோபத்தை எப்படி விரட்டுவது என்று பார்ப்போம்.
1. உங்களுக்குக் கோபம் வருகிறமாதிரி யாராவது நடந்துகொண்டால் அவசரப்பட்டுக் கோபத்தைக் காட்டிவிடுவீர்கள். பிறகு வருத்தப்படுவீர்கள். அதனால், ஏதாவது பேசுவதற்கு முன் நாம் சொல்வது சரிதானா என்று ஒருமுறை யோசித்துவிட்டு, கொஞ்சம் அமைதியான பிறகு பேசிப்பாருங்கள்.
2. சிறிது தூரம் நடக்கவோ, ஓடவோ செய்யுங்கள். உங்கள் கோபம் குறையும்.
3. கோபம் வர என்ன காரணம் என்று தனியாக இருக்கும்போது யோசித்துப் பாருங்கள். அதை எப்படிக் குறைக்கலாம் என்ற தெளிவு பிறக்கும். உங்கள் மீது தவறு இருந்தால், திருத்திக்கொள்ளுங்கள். பிறர் மீது தவறு இருந்தால், ஒரு வாரம் கழித்து அவர்களிடம் நடந்தது என்ன என்பதைத் தெளிவாக விளக்குங்கள். நீங்கள் காயப்பட்டதையும்கூட பொறுமையாக எடுத்துச்சொல்லுங்கள். இதனால், உறவுகளிடம் சிக்கல் ஏற்படாது.
4. கோபத்தை நீங்கள் ஏமாற்றலாம். அழகாகப் புன்னகை செய்யப் பழகிக்கொள்ளுங்கள்.
5. ஒரு தாளில் நீங்கள் எதற்கெல்லாம் கோபப்பட்டீர்கள் என்று எழுதுங்கள். சிறிது நேரத்துக்குப் பிறகு அதைப் படித்துப் பாருங்கள், ரிலாக்ஸாக இருப்பதாக உணர்ந்த பிறகு, பேப்பரைக் கிழிந்து எறிந்துவிடுங்கள். அது உங்கள் கோபத்தைக் குறைப்பதோடு, மற்றவர்களை நீங்கள் கோபமூட்டுவதையும் தடுக்கும்.

Also Read: கோபம் வந்தால் என்ன செய்ய வேண்டும்..? (கோபத்தை கையாளும் விதம்)

6. பத்து வரை எண்ணுங்கள். முடித்த பிறகு, மீண்டும் பத்து முதல் ஒன்று வரை ரிவர்ஸில் எண்ணுங்கள்.
7. தண்ணீரில் குதித்து நீச்சல் அடியுங்கள் அல்லது ஷவரைத் திறந்துவிட்டுக் குளியுங்கள். உங்களின்  கோப உணர்வு தண்ணீரோடு அடித்துச் செல்லப்படும்.
8. மூன்று முறை ஆழ்ந்த மூச்சு விடுங்கள். அதாவது, உங்கள்   மூச்சை நீங்கள் கவனிக்க வேண்டும்.
9. நகைச்சுவைக் காட்சி ஒன்றை உடனே பாருங்கள் அல்லது உங்களுக்குப் பிடித்த நகைச்சுவையை மனதில் அசை போடுங்கள்.
10. உற்சாகத்துக்கும் உணவுக்கும் சம்பந்தம் உண்டு. ஆரோக்கியமான உணவுகள் ஆரோக்கியமான மனநிலையைத்தான் தரும். துரித உணவுகள், தீய பழக்கங்கள் மோசமான உணர்வுகளையே ஏற்படுத்தும். மகிழ்ச்சியான மனநிலையில் இருக்க, ஆரோக்கியமான உணவுகளை உண்பதுதான் நல்லது.
11. சிலருக்குக் கோபம் நோயின் அறிகுறியாக இருக்கும். ஓவர்ஆக்டிவ் தைராய்டு, அதிக கொலஸ்ட்ரால், சர்க்கரைநோய், மனச்சோர்வு, மறதி நோய், ஆட்டிசம், தூக்க மாத்திரைகளை எடுத்துக்கொள்வது போன்ற பிரச்னைகளால்கூட கோபம் வரலாம். இவர்கள் மருத்துவரைச் சந்தித்து சிகிச்சை பெறவேண்டியது அவசியம்.
கோபத்தை அடக்க, கோபம் (Anger), கோபத்தை வெல்லுங்கள், கோபம் குறைய வழிகள், கோபம் வந்தால், கோவம், கோபத்தின் விளைவுகள், kobam kuraiya, kovathai kuraiya tips, how to control anger in tamil