முக சுருக்கம் நீங்கி முகம் பளபளவாக டிப்ஸ் (Muga surukkam neengi Mugam palapalakka tips)
* தினமும் பாலில் தேவையான அளவு தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் எந்த நோய்களையும் எதிர்த்து நிற்கும் ஆற்றலை உடல் பெற்று விடும். முகம் அழகாகவும், உடல் பளபளப்பாகவும் இருக்கும்.* அதிகாலையில் வெறும் வயிற்றில் அத்திப்பழத்தைச் சாப்பிட்டு வந்தால் உடல் அழகும், இளமையும் நாளுக்கு நாள் அதிகமாகும் என்று பழங்கால அரேபிய மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
* முகச் சுருக்கத்தை போக்க தேங்காய் எண்ணையில் மஞ்சத்தூளை போட்டுக் குலைத்து உடம்பிற்கு தடவி. பயத்தமாவை தேய்த்துக் குளித்தால் தோல் பளபளப்பாகவும், மிருதுவாகவும் இருக்கும்.
* தினமும் முகத்தில் ஆலிவ் எண்ணெய் பூசி வர முகச்சுருக்கம் நீங்கி பளபளப்பாக இருக்கும்.
* ஆரஞ்சு பழத்தை இரண்டாக வெட்டி
முகத்தில் தேய்த்து, பத்து நிமிடம் கழித்து சோப்பு போட்டு கழுவ வேண்டும். தினம் இவ்வாறு செய்து வந்தால் முகம் பளபளப்பாகவும், இளமையுடனும் இருக்கும்.
* உலர்ந்த ரோஜா இதழ்களுடன் சிறிது பன்னீரும் சந்தனமும் அரைத்து முகத்தில் தடவ தோலின் நிறம் பொலிவு பெறும்.
* பால், கடலை மாவு, மஞ்சள், சந்தனம், அனைத்தையும் கலந்து முகத்தில் தடவி குளித்தால் சருமம் அழகாகவும், பளபளப்பாகவும் மாறும்.
* முட்டையை உடைத்து, அதனுடன் சில துணி எலுமிச்சை சாற்றைச் சேர்த்து நன்றாக கலக்கவும். இந்த கலவையை சுருக்கம் விழுந்துள்ள பகுதிகள் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி உலர விடுங்கள். பிறகு கழுவி விடுங்கள்.
* ஒரு கனிந்த வாழைப்பழத்துடன் பன்னீர் கலந்து முகத்தில் தடவி ஒரு மணிநேரம் உலரவிடவும். பிறகு வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவவும். தினமும் தொடர்ந்து இம்மாதிரி செய்துவர முகச் சுருக்கங்கள் நீங்குவதோடு முகம் மென்மையாகும்.
* 1 டீஸ்பூன் தக்காளி சாறு, 1 டீஸ்பூன் வெள்ளரிக்காய் சாறு, சில சொட்டுகள் எலுமிச்சை சாறு, பால் சிறிதுடன் ஒரு டேபிள் ஸ்பூன் கடலை மாவு கலந்து முகத்தில் தடவி 20 நிமிடம் ஊறவிட்டு கழுவ, மாசுமறுவற்ற முகத்துடன் நிறமும் முகத்திற்கு கூடுதலாகும்.
* ஒரு தேக்கரண்டி கசகசாவை தண்ணீருடன் சேர்த்து அரைத்து முகத்தில் பூசி மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவி வந்தால் முகம் 'பளிச்' என்று இருக்கும்.
* முகத்தில் உள்ள சுருக்கங்களை போக்க பன்னீரில் சிறிதளவு கிளிசரின் கலந்து முகத்தில் தினசரி தடவி வரவேண்டும். தொடர்ந்து இப்படி செய்தால் சுருக்கம் மறைந்துவிடும்.
Social Plugin