முகம் கழுவும் போது செய்யும் தவறுகள்... Mugam kazhuvum podhu seyyum thavarugal (Making mistakes in the face wash)
பெண்களுக்கு அழகு என்றாலே அதில் பிரதானம் முக அழகுதான். எனவே, முகத்தை பராமரிக்க பல விதங்களில் முயற்சிப்பர். ஆனால், சில சின்ன சின்ன கவனக்குறைவுகளால் முக அழகு குறையலாம்.அடிக்கடி முகம் கழுவக் கூடாது
பொதுவாகவே ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு முறை முகம் கழுவலாம். அதற்கு மேலும் முகத்தை சுத்தமாக வைத்துக் கொள்வதாக நினைத்து முகம் கழுவினால், அது சருமத்தை பாதிக்கும். எனவே, வீட்டில் இருக்கும் போது அல்லது அலுவலகத்துக்கு செல்லும் போதும், அலுவலகத்தை அடைந்த பிறகு, இடைவேளையில் என அடிக்கடி முகம் கருவினால் சருமம் வறண்டு போகும்.
தவறான சோப்புகளைப் பயன்படுத்துதல்..
பொதுவாக பெண்கள் அவர்களது சருமத்தைப் பற்றி நன்கு அறிந்து கொள்ள வேண்டும். எண்ணெய் சருமம், வறண்ட சருமம் என தெரிந்து அதற்கேற்ற சோப்பு அல்லது முகம் கழுவும் க்ரீம்களை பயன்படுத்த வேண்டும். அவ்வாறு இல்லாமல், வறண்ட சருமம் கொண்டவர்கள், எண்ணெய் பசை சருமத்துக்கு ஏற்ற சோப்புகளைப் பயன்படுத்தினால், சருமம் மேலும் வறண்டு போய்விடும். அதிலும், அதிக ரசாயனம் கலந்த சோப்புகளைப் பயன்படுத்தக் கூடாது.
சருமத்துக்கும் ஓய்வு கொடுங்கள்
எப்போதும் முகத்துக்கு மேக்கப் போட்டு வைத்திருந்தாலும், இரவில் படுக்கச் செல்வதற்கு முன்பு, ஈரப் பஞ்சினால் முகத்தில் உள்ள அனைத்து மேக்கப் பூச்சுக்களையும் சுத்தமாக துடைத்து எடுத்துவிடுங்கள். இதனால், சருமத்துக்கு சிறிது ஓய்வு கிடைக்கும்.
வெதுவெதுப்பான தண்ணீர்
முகத்தை கழுவும் போது குளிர்ந்த நீரை விட, வெதுவெதுப்பான தண்ணீரை பயன்படுத்துங்கள். இதனால், உங்கள் முகத்தில் உள்ள நுண்ணிய துவாரங்கள் திறந்துகொள்ளும். இதனால், அதில் அடைந்துள்ள அழுக்கு மற்றும் மேக்கப் சாதனங்களின் துகள்கள், முகத்தை கழுவும் போது வெளியேறிவிடும். அதே சமயம் குளிர்ந்த நீரால் முகத்தை கழுவினால், நுண்ணிய துளைகள் மூடிக் கொள்ளும். எனவே, முகத்தில் அழுக்கை அகற்றும் வகையில் கழுவ வேண்டும் என்றால் வெதுவெதுப்பான தண்ணீரை பயன்படுத்தலாம்.
காய்கறி தோல்
வீட்டில் பயன்படுத்தும் சில காய்கறிகளின் தோல், தக்காளி, கோதுமை மாவு, அரிசி போன்றவற்றை முகத்தில் போட்டு தேய்த்து முகத்தை கழுவுவதன் மூலம், சருமத்தில் உள்ள இறந்த செல்களை அகற்றலாம். சோப்பு போட்டு கழுவுவதை விட, இந்த முறை நல்ல பலனை தரும்.
புதிதாக எந்த க்ரீமையோ அல்லது சோப்பையோ பயன்படுத்தும் போது அதில் உள்ள முக்கியக் குறிப்புகளை படித்துப் பாருங்கள்.
முகத்துக்கு பயன்படுத்தும் அனைத்துப் பொருட்களும் இயற்கையான இயற்கைப் பொருட்களால் ஆனவையாக இருப்பதாக பார்த்து வாங்குங்கள்.
உப்பு தன்மை அல்லது கடின நீரைக் கொண்டு முகம் கழுவ வேண்டாம். இது முக சருமத்தின் தன்மையையே மாற்றிவிடும். அதுபோலவே, மிகவும் கடினமான துணிகளை வைத்து முகத்தை துடைக்கக் கூடாது. மிருதுவான துணிகளைக் கொண்டு முகத்தை ஒற்றி எடுப்பதே நலம்.
ஒருவர் பயன்படுத்திய டவலை மற்றொருவர் பயன்படுத்த அனுமதிக்காதீர்கள். அதனால் பாக்டீரியா தொற்று ஏற்பட வாய்ப்புண்டு. சுத்தமாக நன்கு துவைத்து காயவைத்த டவல்களைப் பயன்படுத்துங்கள்.
மாய்சுரைஸர்கள் பயன்படுத்துவது நல்லது. மாஸ்சுரைஸர்களைப் பயன்படுத்தும் போது அவை நன்கு சருமத்தில் பரவி காயும் வரை காத்திருந்து பிறகு மேக்கப் சாதனங்களை பயன்படுத்துங்கள்.
முகத்தை சுத்தப்படுத்த வென்று பிரத்யேகமாக உள்ள இயற்கை எண்ணெய்களை வாங்கி பயன்படுத்துங்கள். இது சருமத்தில் உள்ள நுண்ணிய துகள்களில் உள்ள அழுக்குகளை அகற்ற உதவும்.
Social Plugin