Type Here to Get Search Results !

இயற்கை பூச்சி கொல்லி: இஞ்சி - பூண்டு - மிளகாய் கரைசல் செய்வது எப்படி?

இயற்கை பூச்சி கொல்லி:  இஞ்சி - பூண்டு - மிளகாய் கரைசல் செய்வது எப்படி?


செய்ய தேவையானவை:
1. பூண்டு 1 kg
2. கெரசின்
3. பச்சை மிளகாய் - 1/2 kg
4. இஞ்சி - 1/2 kg
5. காடா துணி
6. தண்ணீர்
7. காதி சோப்

கரைசல் செய்முறை:
பூண்டு 1 kg எடுத்து கெரசினில் 12 மணி நேரம் ஊறவைக்க வேண்டும்.
mooligai poochu viratti, iyarkai vivasayam, iyarkai poochi kolli marundhu poondu karaisal
பின்னர் இதனை எடுத்து நல்ல விழுதாக வருமாறு அரைத்துக் கொள்ள வேண்டும்.
அரை கிலோ பச்சை மிளகாய் மற்றும் அரை கிலோ இஞ்சி எடுத்து தனித்தனியாக விழுது பதத்தில் அரைத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

பின் இவ்வாறு தனித்தனியாக அரைத்த விழுதுகளை நன்றாக கலந்து ஒரு காடா துணியில் வைத்துக்கொள்ள வேண்டும். (ஜிலேபி பிழிவது போல்
வைத்துக்கொள்ள வேண்டும்).

இவ்வாறு தயார் செய்த காடா துணியில் வைக்கப்பட்ட கலவையை 6 லிட்டர் தண்ணீரில் முக்கி ரசத்தை வடிக்கவும். இப்போது நமக்கு 6 லிட்டர் கரைசல் தயார்.

இந்த கரைசலை பூச்சி தாக்குதல் குறைவாக இருந்தால் 500 மில்லியும் தாக்குதல் அதிகமாக இருந்தால் 1 லிட்டரும் எடுத்து 9 லிட்டர் தண்ணீரில் கலந்து பூச்சிகள்/செடிகள் மீது தெளித்தால் புழு வகை பூச்சிகள் முற்றிலும் கட்டுப்படுத்தப்படும்.

காதி சோப்பை தண்ணீரில் கரைத்து அடித்தால் அது நாம் அடிக்கும் இயற்கை பூச்சிமருந்து கரைசலை செடியின் மீது ஈர்த்து வைத்துக்கொள்ள உதவும். இதன் மூலம் இக்கரைசலின் வீரியமும் அதிக நேரம் செடியில் இருக்கும்.

குறிப்பு: இதை தயார் செய்யும்போது கைக்கு கையுறை தேவை. இல்லையெனில் கை எரிச்சல் அதிகமாக இருக்கும். கவனம் தேவை.

இது http://www.envivasayam.com தளத்தின் பதிவு

iyarkai vivasayam, iyarkai velanmai, இயற்க்கை விவசாயம், மூலிகை பூச்சு விரட்டி, இயற்க்கை பூச்சிக்கொல்லி மருந்து தயாரிக்கும் முறை, பாரம்பரிய விவசாயம், மூலிகை பூச்சி விரட்டி, பூண்டு கரைசல் செய்வது எப்படி, iyarkkai vivasayam, mooligai poochu viratti, iyarkai poochikkolli marundhu thayaarikkum murai