F.lux - கணினியின் திரையிலிருந்து வரும் தேவையற்ற வெளிச்சத்தை தானாக கண்ட்ரோல் செய்து நமது கண்களை பாதுகாக்கும் இலவச மென்பொருள்..(F.lux is free software that warms up your computer display at night, to match your indoor lighting, Reduce Eye Strain and Get Better Sleep by Using F.lux)
நாம் தினம்தோறும் உபயோகிக்கும் கம்ப்யூட்டர் மானிடர் ஒளியை இரவு மற்றும் பகல் வேலைகளுக்கு ஏற்றவாறு மாற்றி அமைப்பதன் மூலம் நமது கண்களை பாதுகாக்க முடியும். பொதுவாக திரையின் வெளிச்சம் பகலில் குறைவாகவும் இரவில் அதிகமாகவும் தெரியும் இதனால் நமது கண்கள் நாளடைவில் பாதிப்படையும்.
இரவும் பகலும் ஒரே வெளிச்சத்தில் வைத்திருக்ககூடாது. கண்களுக்கு போதுமான வெளிச்சத்தை பெறுவதற்கு தினம்தோறும் நினைவில் வைத்துகொண்டு ஒளியை மாற்ற வேண்டும், இது பொதுவாக எல்லோராலும் இயலாத காரியம். இதற்கெனவே ஒரு இலவச மென்பொருள் ஒன்று உள்ளது அதன் பெயர் 'ஃ ப்.லக்ஸ்'.
இதனை இலவசமாக தரவிறக்கம் செய்து வைத்துகொண்டால், இந்த மென்பொருள் தானாகவே கணினியின் வெளிச்சத்தை பகல் இரவு வேலைகளுக்கு ஏற்றவாறு மாற்றி அமைத்துக்கொள்ளும். விண்டோஸ் மட்டுமல்லாமல் லினக்ஸ், மேக் போன்ற கணினிகளுக்கும் இந்த மென்பொருள் பதிப்பு உள்ளது.
Android போன் வைத்திருப்போர் Bluelight Filter என்ற இதற்க்கு சமமான இலவச Appபை கூகிள் ப்ளே ஸ்டோரிலிருந்து இன்ஸ்டால் செய்துகொள்ளலாம்.
kanini thirai velicham control seliyya flux software free download, Tamil computer ulagam, computer tips in tamil,Flux automatically control computer monitor brightness and save eyes from damage
Social Plugin