இஞ்சி சாறு 15ml, மாதுளை சாறு 15ml மற்றும் தென் 15ml கலந்து குடித்தல் மூச்சு நன்றாக வரும் ஆஸ்த்மா சரியாகும், மூச்சிறைப்பு குணமாகும், சிறு குழந்தைகளுக்கும் மூச்சு திணறல் இருந்தால் இந்த இஞ்சி சாரை கொடுக்கலாம்.
சரி, இன்று நமது இயற்க்கை மருத்துவர் சத்தியவானி சொல்லபோகும் மருத்துவம் - 'இஞ்சி தைலம்'.
இஞ்சி தைலம் குணப்படுத்தும் நோய்கள்: நீர் கோவை(சைனஸ் - Sinus), தலை பாரம், நரம்பு இசிவு( தலை ஒருபக்கம் இழுப்பது)
தேவையான மூலிகை பொருட்கள்: இஞ்சி - 200 கிராம், பால் - சம அளவு, நல்லெண்ணெய் - சம அளவு
செய்முறை: இஞ்சியை நசுக்கி சாறு எடுத்து தெளிய வைத்துக்கொள்ள வேண்டும் அதனுடன் சம அளவு பாலும் நல்லெண்ணையையும் எடுத்துக்கொள்ள வேண்டும்.
அடுப்பில் வாணலியை வைத்து சூடு ஏறியவுடன் தெளிஞ்ச இஞ்சி சாரை ஊற்ற வேண்டும் அதை சிறிது கிண்டி அதிலுள்ள நீர் கொஞ்சம் சுண்டியவுடன் அதனுடன் பாலை ஊற்றி கிண்ட வேண்டும், இரண்டும் ஒன்றாக சேர்ந்து குழம்பு பதத்திர்ற்கு வந்ததும் அதனுடன் ஒரு பங்கு நல்லெண்ணையை சேர்த்து கிளற வேண்டும் சிறிது நேரம் கிளறியதும் மீதி பங்கு எண்ணையையும் சேர்த்து கிண்ட வேண்டும். சிறிது நேரத்தில் அனைத்தும் நன்றாக சேர்ந்து எண்ணெய் கொதித்து வரும்பொழுது இஞ்சி தைலத்தை அடுப்பிலிருந்து இறக்கிவிடலாம். இறக்கிய தைலத்தை தெளிய வைக்க 4 அல்லது 5 மணி நேரம் பிடிக்கும்.
இந்த தைலத்தை வாரம் இரண்டு முறை தலைக்கு வைத்து தேய்த்து குளித்துவந்தால் தலைவலி, சைனஸ், கழுத்து வலி, நரம்பு பிடிப்பு போன்ற உடல் உபாதைகள் தீரும். வேண்டுமென்றால் இதை சாப்பிடவும் செய்யலாம்.
by Dr.Sathyavani
sinus infection home treatment in tamil, sinus tamil medicine, natural ways to cure a sinus infection, how to treat a sinus infection naturally, sinus headache home treatment with ginger, milk and sesame oil, tamil maruthuvam, paati vaithiyam, granny therapy, iyarkai marundhu
Social Plugin