{Karavai maadu valarppu thozhil nunukkangal}
மாட்டிற்கு மடி நோய் தாக்காமல் தடுக்க என்ன செய்யலாம்?
மாடு பால் கறந்த பிறகு அரை மணி நேரம் கீழே படுக்கவிடாமல் செய்யவேண்டும். அப்படி செய்வதற்கு பால் கறந்தவுடன் தீவனமும் தண்ணீரும் காட்டவேண்டும். பால் கறந்ததும் மாடு தரையில் படுப்பதற்கு காரணம் - மாட்டிற்கு சத்து குறைவு இருக்கும். மாடு கட்டியிருக்கும் கொட்டாயை சுத்தமாக வைத்திருக்க வேண்டும், மடி நோய் வருமென சந்தேகம் இருந்தால் Potassium Permanganate போட்டு மடியை கழுவி பால் கறந்தால் மடி நோய் வராது.
- மக்கா சோழ தட்டையை அப்படியே போடாமல் சிறு சிறு துண்டுகளாக வெட்டி போட்டால் 25 சதவிகித தீவனம் மிச்சமாகும்.
- பால் கறக்கும் இயந்திரம் கொண்டு பால் கறந்தால் 2 மணி நேரத்தில் கறக்க வேண்டிய பாலை 10 நிமிடத்தில் கறந்துவிடலாம்.
- ஒவ்வொரு மாட்டிற்கும் ஒரு பெயர் வைத்து மாட்டிற்கு கொடுத்த மருந்து, சினை பிடித்த காலம் போன்றவற்றை பதிவு செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.
- பெரிய மாடுகளுக்கு படுத்து எழுந்திரிக்க Cow mat போட்டு வைத்துகொள்வது நல்லது. ஒரு cow mat சுமார் 2500 ருபாய் இருக்கும்.
- மாட்டின் சிறுநீரை மற்றும் நீர் கழிவுகளை சேகரித்து மாதத்திற்கு ஒரு முறை நிலங்களுக்கு நீராக பாய்க்கலாம், இது சிறந்த உரமாக அமையும். ஆனால் சிறுநீரை நேரடியாக செடிகளுக்கு பாய்ச்சக்கூடாது.
- மாட்டு பண்ணை ஆரம்பிக்கும் பொழுது கொட்டாய் குளிர்ச்சியாக இருக்க கூரை கொட்டாய் போடலாம், இதனால் ஆரம்ப செலவு மிச்சமாகும். பின் வரும் வருமானத்தை வைத்து தேவையான கொட்டாய் போட்டுக்கொள்ளலாம்.
Karavai maadu, paal maaadu valarppu thozhil muraigal, nunukkangal, siru thozhil ideas, maattu pannai thozhil, small business ideas, cow farming ideas in and tips in tamil, Basics of cow farming, paal maadu, kandru kutti, kaalnadai valarppu
Social Plugin