காளான் கட்லெட் சமையல் [Mushroom cutlet recipe]
கடைகளில் கட்லெட் வாங்கி சாப்பிட சிறுவர் முதல் பெரியவர் வரை விரும்புவார்கள். உடலுக்கு சத்தும் மருத்துவ குணமும் நிறைந்த காளானை வைத்து மஷ்ரூம் கட்லெட் செய்து நமது வீட்டிலுள்ள அனைவருக்கும் பரிமாறினால் மிகவும் சந்தோசமடைவார்கள்.
சரி, சத்து நிறைந்த காளான் கட்லெட் எப்படி செய்வது என பார்க்கலாம்,
தேவையான பொருட்கள்:
- காளான் - 100 கிராம்
- வேக வைத்த உருளைக்கிழங்கு - 1 பெரியது
- வெங்காயம் - 1
- பச்சை மிளகாய் - 2
- கொத்தமல்லித்தழை - சிறிதளவு
- கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்
- மைதா - 1 டேபிள்ஸ்பூன்
- பிரட் க்ரம்ஸ் - பிரட்டுவதற்க்கு
- உப்பு+எண்ணெய் = தேவைக்கு
காளான் கட்லெட் செய்முறை:
காளான், வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி அனைத்தையும் மிக பொடியாக நறுக்கவும்.
காளானை மட்டும் கடாயில் போட்டு எண்ணெய் ஊற்றாமல் நீர் வற்றும் வரை வதக்கவும். அதனுடன் மசித்த உருளை மற்றும் எண்ணெய் நீங்கலாக அனைத்து பொருட்களும் ஒன்றாக சேர்த்து பிசையவும்.
மைதாவில் சிறிது உப்பு சேர்த்து நீர் விட்டு கெட்டியாக கரைக்கவும்.
சிறு உருண்டைகலாக எடுத்து விரும்பிய வடிவில் செய்து மைதாவில் நனைத்து பிரெட் க்ரம்ஸில் பிரட்டி 15 நிமிடம் ப்ரிட்ஜில் வைத்திருந்து எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
பின் குறிப்பு:
*காளானை வதக்காமல் அப்படியே போட்டால் கட்லட் வேகும்போது காளான் நீர்விட்டு கட்லட் சரியாக வராது.
Kaalan cutlet recipe, Mushroom cutlet recipe in tamil, cooking tips and procedures for catering students, Hotel catering recipes, Mushroom recipes, tamil samayal seimurai
Social Plugin