Type Here to Get Search Results !

கண்டங்கத்திரியின் மருத்துவ பயன்கள் Kandankathariyin maruthuva payangal

Kandankathariyin marutthuva payangal, Mooligai sedi vilakkam, tamil maruthuva thavaram, pal vali, astham, valippu noi sariyaaga iyarkkai maruthuvam

Kandankathariyin marutthuva payangal 

கத்தரிக்காய் பற்றி எல்லோருக்கும் தெரியும். கண்டங்கத்திரி பற்றி பலருக்கு தெரியாது. கண்டங்கத்திரி, கத்திரிக்காயை விட சிறியதாகவும் சுண்டக்காயை விட பெரியதாகவும் இருக்கும். காட்டு பகுதியில் வளரக்கூடியதாகும். கண்டங்கத்திரி படர்செடி வகையைச் சார்ந்தது.  இது எல்லா இடங்களிலும் செழித்து வளரும் தன்மை கொண்டவை. இக்காய், உணவுக்கு பயன்படுவதில்லை. மருத்துக்கு மட்டுமே பயன்படுகிறது. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் தரிசு நிலங்களிலும் தானே வளர்கின்றது. கோழை அகற்றியாகவும், சிறுநீர் பெருக்கியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் பயன்படுகின்றது.

கண்டங்கத்தரிக்கு, கண்டகாரி, முள்ளிக்காய் என்ற வேறு பெயர்களும் உண்டு. 
கண்டங்கத்திரியின் ஆங்கிலப் பெயர்: Solqnumsuraltense, Burmfi solqnqceae
சித்த மருந்துகளில் புகழ் பெற்ற மருந்து தசமூலம் என்பதாகும். இது, பத்து மூலிகைகளின் வேர்களை கொண்டு தயாரிக்கப்படுவதாகும். இந்த பத்து வகை மூலிகைகளில் கண்டங்கத்திரியும் ஒன்று.
 இதன் இலை, பூ, காய் பழம், விதை, வேர் அனைத்தும் மருத்துவப் பயன் கொண்டவை.  கார்ப்புச் சுவை கொண்ட இது சித்த, ஆயுர்வேத மருத்துவ முறைகளில் அதிகம் சேர்க்கப்படுகிறது.
சுவாசம் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களையும் குணப்படுத்தும் தன்மை கண்டங்கத்திரிக்கு உண்டு.



கண்டங்கத்திரி இலையை இடித்து, சாறு எடுத்து அதனுடன் சம அளவு தேங்காய் எண்ணெய் சேர்த்து பக்குவமாக காய்ச்சி வடித்துக் கொள்ள வேண்டும். இதை, உடலில் வியர்வை நாற்றம் இருப்பவர்கள் பூசி வந்தால் உடல் நாற்றம், வியர்வை நாற்றம் (udal naatram, viyarvai kathalai naatram poga) நீங்கும்.

கண்டங்கத்திரி இலையை இடித்து சாறு எடுத்து அதனுடன் சம அளவு நல்லெண்ணெய் சேர்த்து பக்குவமாக காய்ச்சி வடித்து பூசினால் தலைவலி, கீல்வாதம் முதலிய வாத நோய்கள் நீங்கும்.
காலில் ஏற்படுகின்ற வெடிப்புகளுக்கு(kaal paadha vedippu sariyaaga), இதன் இலையை இடித்து எடுத்து சாற்றுடன் ஆலிவ் எண்ணெய் சம அளவு கலந்து பக்குவமாக காய்ச்சி பூசிவந்தால் மறையும்.

கண்டங்கத்திரி பூவை சேகரித்து நெய்யுடன் சேர்த்து பக்குவமாக காய்ச்சி மூலநோய்க்கு பூசினால் நன்மை தரும். கண்டங்கத்திரி காயை சமைத்து உண்டுவந்தால் நெஞ்சில் கட்டியிருக்கும் சளியை வெளியேற்றும்; பசியை தூண்டும்.

சிறு குழந்தைகளுக்கு ஏற்படும் நாள்பட்ட இருமலுக்கு இதன் பழத்தை உலர்த்தி பொடி செய்து, குறிப்பிட்ட அளவு தேனுடன் கலந்து இரண்டு வேளை கொடுக்கலாம்.
பல்வலிக்கும், பல்லில் இருக்கும் கிருமிகளை போக்கவும், கண்டங்கத்திரி பழத்தின் விதைகள் பயன்படும். நெருப்பில் இவற்றை போட புகை எழும். இப்புகையை பற்களின் மேல்படும்படி செய்ய வலி தீரும். இதன் பழத்தையும் உலர்த்தி பொடித்து நெருப்பில் போட புகை வரும். இதனாலும் பல்வலி, பல்லிலுள்ள கிருமிகள் நீங்கும். நீண்டநாட்களாக அவதிப்பட்டு வந்த தொல்லை மறையும்.

கண்டங்கத்திரி கஷாயம்: இண்டு கண்டங்கத்திரி, ஆடாதோடை, தூதுவளை, துளசி இலை, வால்மிளகு, சுக்கு, திப்பிலி  இவற்றில் தலா 5 கிராம் அளவு எடுத்து இடித்து பொடித்து இரண்டாகப் பிரித்து காலையில் 1 பங்கை 2 கப் நீரில் கொதிக்க வைத்து 1 கப்பாக வற்ற காய்ச்சி வடிகட்டி அருந்தவேண்டும்.  அவ்வாறே மற்றொரு பங்கை மாலையில் செய்து அருந்தவேண்டும்.  இது தீராத ஆஸ்துமா, வலிப்பு நோய் போன்றவற்றிற்கு சிறந்த நிவாரணியாகும்.
Kandankathariyin marutthuva payangal, Mooligai sedi maruthuva kunangal, Tamil maruthuvam thavaram, pal vali poga iyarkkai maruthuvam, valippu noi, aasthuma sariyaaga maruthvam