சாவுன்னா அவ்ளோ பயம், இல்ல..?
...
* ஹோட்டல்ல ஆர்டர் பண்ணின சாப்பாட்டு அயிட்டம் வரும் வரை பொறுமையா அடுத்தவன் தட்டை வேடிக்கை பார்க்கும் நம்மளால, ரோட்டுல நடந்த சின்ன ஆக்சிடென்ட்டுக்கு வண்டிய விட்டு கீழ இறங்கி உதவத் தோணல.
நம்மல்லாம் அவ்ளோ தைரியசாலி, இல்ல..?
* யாரோ கல்யாணம் செஞ்சு நமக்கு புண்ணியம் தரப் போற இந்நாள் காதலி கூட காபி ஷாப்ல ரெண்டு மணி நேரம் பேசுனதையே திரும்பத் திரும்பப் பேச முடியற நம்மளால, ஹாஸ்பிட்டல்ல ஒருத்தர் கூட பத்து நிமிஷம் பொறுமையாவும் அன்பாவும் பேச முடியல.
எப்பவும் ஜாலியா தான் இருக்கணும், இல்ல..?
* ஒரு பெரிய சாமியாருக்காக மணிக்கணக்குல காத்திருந்து தவம் செஞ்சு பார்க்கத் துடிக்கும் நம்மளால, நம்ம குழந்தைங்க கூட கொஞ்ச நேரம் கூட விளையாட முடியல... அவங்கள கொஞ்ச முடியல.
அவங்க கேட்கற கேள்விக்கு பதில் சொல்ல முடியாது, இல்ல..?
* மொபைல் ஸ்கிரீன், கம்ப்யூட்டர் ஸ்கிரீன், சினிமா ஸ்கிரீன், டி.வி ஸ்கிரீன்னு பார்க்கும் நம்மள்ல எத்தனை பேரு, சக மனிதனின் முக ஸ்கிரீனைப் பார்த்து புன்னகையும், பதிலும் சொல்லுறோம்?
சிரிக்கிறது அவ்ளோ கஷ்டம், இல்ல..?
* காலையில் எந்திருச்சு வாக்கிங் போகணும்னு அக்கறை காட்டுற நம்மில் எத்தனை பேரு வீட்டுல அம்மா / அப்பா / மனைவிகிட்ட டாக்கிங் செய்யணும்னும் நினைக்கிறோம்?
நிறைய உண்மைகள் பேசவேணும், இல்ல..? படித்ததில் பிடித்தது... அது முடியுது, இது முடியலயோ., sindhanai sidharal, padithathil pidithathu, சிந்தனை, tamil thoughts, tamil sindhanaigal