Type Here to Get Search Results !

தலைசிறந்த 10 அமெரிக்க அறிவியல் ஆராய்ச்சியாளர்களில் இடம்பெற்ற இரண்டு இந்தியர்கள்...

0
சிறந்த 10 அமெரிக்க அறிவியல் ஆராய்ச்சியாளர்களில் இடம்பெற்ற இரண்டு இந்தியர்கள்...

அமெரிக்காவை சேர்ந்த பாப்புலர் சைன்ஸ் மேகசின் என்ற பத்திரிகை இந்த ஆண்டிற்கான அமெரிக்காவின் தலைசிறந்த 10 அறிவியல் ஆராய்ச்சியாளர்களின் பெயர்களை வெளியிட்டது இதில் இந்தியவைசேர்ந்த ப்ரபால் தட்டா மற்றும் மனு பிரகாஷ் என்ற இரு இளைஞர்களின் பெயர் இடம்பெற்றுள்ளது.

வரபோகும் எதிர்கால சந்ததிகளுக்கு உபயோகமாக இருக்கும் வகையில் கண்டுபிடிப்புக்களை ஆராய்ச்சி செய்துள்ள தலைசிறந்த ஆராய்ச்சியாளர்களின் தேர்ந்தெடுப்பு சுமார் ஆறு மாதங்களாக நடைபெற்றதாம்.

2 indians named in top 10 American scientists in popular science magazine survey, Prabal Dutta and Manu Prakash, @PopSci
2014 Top 10 scientists in America listed by America's Popular Science Magazine

ப்ரபால் தட்டாவின் மின் சக்தி தயாரிக்கும் மிக சிறிய சென்சாருக்காக இவருக்கு இந்த அறிய வாய்ப்பு கிடைத்துள்ளது. இவருடைய கண்டுபிடிப்பான டைனி சென்சர், நாம் வசிக்கும் சுற்றுபுறத்திலிருந்து மின் சக்தியை தயாரிக்கும் சக்தி கொண்டது. நமது அறையிலுள்ள விளக்கின் வெளிச்சத்தில் இருந்தும், மின் கம்பிகள் வழியாக செல்லும்  மின்சாரத்திலிருந்து வெளிவரும் காந்த சக்தியிலிருந்தும் மற்றும் சில அறிய பொருட்களிலிருந்தும் மின் சக்தி தயாரிக்கும் தன்மையை கொண்டுள்ளது.

மனு பிரகாஷ், இரண்டு விலை குறைந்த பொருட்களை கண்டுபிடித்துள்ளார்.

முதலாவதாக, பாக்கெட் சைஸ் காகித நுண்நோக்கியை உருவாக்கியுள்ளார், இதன் மூலம் நாம் வசிக்கும் சுற்றுசூழத்திலுள்ள மிக நுண்ணிய கிருமிகளை பார்க்க முடியுமாம். ரத்தத்திலுள்ள மலேரியா நுண்கிருமிகள் மற்றும் பல நுண்ணிய கிருமிகளை கண்டறியும் திறன் கொண்ட இதன் விலை மிகவும் குறைவு, சுமார் 30 ருபாய் இந்திய மதிப்பு கொண்டது.

இரண்டாவதாக சுமார் 300 ருபாய் விலை மதிப்பு கொண்ட பள்ளிகளில் பயிலும் அனைத்து பிள்ளைகளும் உபயோகபடுத்தும் வகையில் ப்ரோக்ராம் செய்யக்கூடிய கெமிகல் உபகரம் ஒன்றை கண்டுபிடித்துள்ளார்.  இதன் மூலம் தண்ணீரின் சுத்தமான தன்மையை கண்டறிவது, மருத்துவ பரிசோதனைகள் மற்றும் பல வேதி பரிசோதனைகளை பள்ளி பிள்ளைகளே செய்யமுடியுமாம்.
2 indians named in top 10 American scientists in popular science magazine survey, Prabal Dutta and Manu Prakash, @PopSci , தலைசிறந்த 10 அமெரிக்க அறிவியல் ஆராய்ச்சியாளர்களில் இடம்பெற்ற இரண்டு இந்தியர்கள், two popular indians in america, tiny sensors harvest energy from their surroundings, pocket-size paper microscope, $5 programmable children’s chemistry set

கருத்துரையிடுக

0 கருத்துகள்