Type Here to Get Search Results !

ஜீவா சினிமா விமர்சனம் | 26 Sep 2014 | 'Jeeva' Tamil Movie review | Vishnu, Sri Divya

0
கதாநாயகன்: விஷ்ணு
கதாநாயகி: ஸ்ரீதிவ்யா
இயக்குனர்: சுசீந்திரன்
இசை: இமான்
Release Date: 26 Sep 2014

ன்னுடைய படங்களில் எப்போதும் ஒரு சாதாரண மனிதனின் இயல்பு வாழ்க்கையில் நடக்கும் சின்ன சின்ன சம்பவங்களையே படமாக எடுக்கும் சுசீந்திரன் இந்த முறை கையில் எடுத்திருப்பது கிரிக்கெட்.. நம் தமிழக மண்ணில் கிரிக்கெட் ஒரு சாதாரண இளைஞனின் வாழ்க்கையில் எப்படி விளையாடுகிறது என்பதை மிக நெருக்கமாக படம் பிடித்திருக்கிறார் ..

மிக இயல்பாக நாயகனுக்கு கிரிக்கெட் சிறு வயதில் இருந்து அவனோடு எப்படி ஒட்டிப்போகிறது என்பதை படம் துவங்குவதில் மிக அழகாக சொல்லிவிட்டு, வழக்கமான ஒரு காதல் எபிசோடை ரொம்பவும் போட்டு திணிக்காமல், சின்னதாக ஒரு பிரேக் விட்டு பின்பு தொடரவைத்து .. கிரிக்கெட்டையும் அதனால் ஏற்படும் சாதாரண குடும்பத்து பிரச்சினைகளையும், கிரிக்கெட்டில் சாதிக்க நினைக்கும் சாதாரண குடும்பத்து இளைஞர்கள் எப்படி எல்லாம் ஓரங்கட்டபடுவார்கள் என்பதை தைரியமாக சொல்லிவிட்டு, கிரிக்கெட் நட்பையும் அந்த நட்பின் பிரிவையும் அழுத்தமாக சொல்லி நெகட்டிவாக ஒரு எண்டு கார்டு போடாமல் பாசிட்டிவாக படத்தை முடித்து கைதட்டு வாங்கிவிட்டார் சுசீந்திரன்.
;'Jeeva' Tamil Movie review | Vishnu, Sri Divya, Jeeva 2014 cinema vimarsanam, Tamil cinema reviews,

“ஜீவா” வாக நடித்திருக்கும் விஷ்ணுவிஷால் அப்படியே இந்த கதாபாத்திரத்துக்கு பொருந்தி போகிறார். நல்ல விளையாடுகிறார் [அவரும் ஒரு நிஜ கிரிக்கெட்டர்] நல்ல நடிக்கவும் செய்திருக்கிறார் . இமான் பின்னணி இசையிலும் பாடல்களிலும் [ ஒரே ஒரு பாடலைதவிர] பிரமாதப்படுத்தி இருக்கிறார் ..

ஒளிப்பதிவு மதி கிரிக்கெட் விளையாட்டை படம் பிடிப்பதில் இருக்கும் சிரமங்களை துளியும் திரையில் தெரியாமல் மிக நேர்த்தியாக படம் பிடித்து இருக்கிறார் ..

ஒரே ஒரு பாடலுக்கு நடனமாடிய நட்டி [இப்போவெல்லாம் ஐட்டம் கேர்ள்ஸ் கிடைப்பதில்லை போலும் ] அசத்தலாக பாடலில் வந்து கவர்ந்து போகிறார்..
 
கதா நாயகி ஸ்ரீ திவ்யா பள்ளிக்கு செல்லும் மாணவியாக, கல்லூரி மாணவியாக, வேலைக்கு செல்லும் பெண்ணாக பொருத்தமாக இருக்கிறார். அதிலும் ஒயின் குடித்து விட்டு விஷ்ணுவிடம் மாட்டி முழிக்கும் காட்சியில் பிரமாதம்..
இளைஞர்களுக்கு தேவையான காதல், நட்பு எல்லாம் படத்தில் இருந்தும் சின்ன சின்ன அட்வைசுகளையும் அள்ளி தெளித்த சுசிந்திரன் … இந்த பாரில் சரக்கு அடிப்பது போல பாடலை எடுக்காமல் தவிர்த்து இருக்கலாம் …

விஷ்ணுவின் நண்பனாக வரும் லக்ஷ்மன்,  அவரின் இயல்பான நடிப்பால் நம்மை கவர்ந்துவிடுகிறார்.. அதுவும் அனைத்து திறமை இருந்தும் தாங்கள் நிராகரிக்க படுகிறோம் எனும் இடத்தில அவரின் குமுறல்கள் தியேட்டரில் கைதட்டல்களை அள்ளுகிறது..அவரின் இறப்பிற்கு பிறகே படம் சூடு பிடிக்க ஆரம்பிக்கிறது..[உங்களுக்கு பிரகாசமான இடம் இருக்கு தம்பி... ]

கிரிக்கெட்டில் திறமையும் வேகமும் மட்டும் இருந்தால் போதாது அதுக்கு வேற ஒரு குடியில பிறந்திருக்கணும் என்பதையும், கண்ணுக்கு தெரிந்த மனித விஷக்கிருமிகள் இன்னும் எத்தனையோ திறமைசாலிகளை ‘எப்படி இல்லாமல் ஆக்குகிறது’ என்பதை வெளிச்சம்போட்டு காட்டி இருக்கும் படம்தான் “ஜீவா”.

மத்த படி போர் அடிக்காமல் ஒரு விசயத்தை அழகாக சொல்லி முடித்தற்காக சுசிந்திரனுக்கு ஒரு பெரிய சல்யுட்.

ஜீவா, விஷ்ணுவிற்கும் சுசீந்திரனுக்கும் நமக்கும் இன்னொரு வெண்ணிலா கபடி குழுவின் பரவசத்தை தரும் என்பதில் சந்தேகமில்லை!..
[Credits to : www.cinesnacks.net ]

Jeeva film Official Trailer:
Presenting the official trailer of Suseenthiran’s Jeeva! The film starring Vishal Vishnu, Sri Divya, Soori & Lakshman Narayan is the story about an ardent cricket fan and his dream to play international matches. How he manages to balance his love life and achieve his cricketing dreams forms the plot of the movie. Movie - Jeeva Director - Suseenthiran Starring - Vishnu Vishal, Sri Divya, Soori & Lakshman Narayan Music - D. Imman Studio – The Show People, Vishal Film Factory & The Next BiG Film Music Label - Sony Music Entertainment India Pvt. Ltd. © 2014 Sony Music Entertainment India Pvt. Ltd.

 'Jeeva' Tamil Movie review | Vishnu, Sri Divya, Jeeva 2014 cinema vimarsanam, Tamil cinema reviews, Jeeva film story, Acting performance, music review, story review, Cricket kadhai,comedy, songs review, teaser trailer, preview show

கருத்துரையிடுக

0 கருத்துகள்