மனிதர்களின் உயிர் காக்கும் உறுப்பு என்பது இதயம்தான். இப்போது சிறுவயதிலேயே பலருக்கும் இதய நோய் வந்துவிடுகிறது. காரணம் வேலைப்பளுவினால் ஏற்படும் மன உளைச்சல் என்றும் கூறப்படுகிறது. அதோடு, சிறுவயதிலேயே மது அருந்தும் பழக்கம், சிகரெட் பிடிக்கும் பழக்கம், மற்ற போதை பொருட்கள் பயன்படுத்தும் பழக்கம், போன்ற காரணங்களும் அதிகமாக எண்ணெய் சேர்க்கப்பட்ட உணவு வகைகளை எல்லா நேரத்திலும் உண்ணும் வழக்கம் இவைகளினாலும் இதயம் பாதிக்கப்படுகிறது.
மேற்கண்ட அனைத்தயும் தவிர்க்கும் வழிமுறைகளை மேற்கொண்டு, இளைய தலைமுறையின் தங்களது இதயத்தை பாதுகாத்துக் கொண்டு, நலமுடன் வாழ வேண்டும் என்கிற விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவே கடந்த இரண்டாயிரமாவது ஆண்டிலிருந்து இதய தினம் என்பது செப்டெம்பர் மாதம் 29ம் திகதி வருடாவருடம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
சர்வதேச அளவில் வருடத்துக்கு ஒரு கோடியே 73 லட்சம் இதய நோயினால் மட்டுமே உயிரிழக்கின்றனர் என்று ஒரு அறிக்கைத் தெரிவிக்கிறது. எனவே, இதயத்தை எப்படியெல்லாம் பாதுகாத்துக்கொள்ளலாம் என்று இளைய தலைமுறையினரும் முதியவர்களும் மருத்துவரைக் கலந்தாலோசித்து, இதய நோய் வராமல் பாதுகாத்துக்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை இன்றே மேற்கொள்ளவது மிக அவசியமாகிறது.