Type Here to Get Search Results !

மங்கள்யானிலிருந்து எடுக்கப்பட்ட செவ்வாய் கிரகத்தின் முதல் புகைப்படம் !

0
மங்கள்யானிலிருந்து எடுக்கப்பட்ட செவ்வாய் கிரகத்தின் முதல் புகைப்படம் !

"8449 கி.மீ. உயரத்தில் இருந்து பார்த்தால் தெரியும் இந்த செவ்வாய் வளிமண்டல புகைப்படங்கள் மங்கள்யானில் உள்ள கலர் கேமராவால் எடுக்கப்பட்டது" என்று இஸ்ரோ தனது பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளது.
 
செவ்வாய் கிரகத்தை பற்றி ஆய்வு செய்வதற்காக ‘மங்கள்யான்’ விண்கலத்தை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) கடந்த ஆண்டு நவம்பர் 5–ந் தேதி அனுப்பியது. இதில் 5 ஆய்வு கருவிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்த விண்கலம் விண்வெளியில் 324 நாட்கள் பயணம் செய்து திட்டமிட்டப்படி 24 செப் 2014 காலை 8 மணிக்கு செவ்வாய் கிரக சுற்றுவட்ட பாதையை அடைந்தது.

ISRO Mangalyaan taken first picture of Mars, Mars picture taken by Mangalyaan satellite, India mission to Mars pictures
7,300  கி.மீ. உயரத்தில் இருந்து ‘மங்கள்யான்’ விண்கலம் எடுத்து அனுப்பிய செவ்வாய் வளிமண்டல புகைப்படம்

Mars Imagesm, sevvai kiraga pugaipadangal, sevvaai kiragam photos, mudhal pugaipadangal, Mars image gallery
8449 கி.மீ. உயரத்தில் இருந்து ‘மங்கள்யான்’ விண்கலம் எடுத்து அனுப்பிய செவ்வாய் வளிமண்டல புகைப்படம்

செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பை புகைப்படங்கள் எடுத்து, பெங்களூர் அருகே பைலாலு என்ற இடத்தில் உள்ள இஸ்ரோவின் கண்காணிப்பு மையத்துக்கு அனுப்பி உள்ளது. மங்கள்யான், செவ்வாய் கிரகத்தில் இருந்து 7,300 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்த போது எடுத்த புகைப்படத்தை நேற்று இஸ்ரோ வெளியிட்டது. இந்த படங்களில் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பு ஆரஞ்சு நிறத்தில் காணப்படுகிறது. படத்தில் ஆங்காங்கே கறுப்பு நிற பள்ளங்களும் காணப்பட்டது. தற்போது, 8449 கி.மீ. உயரத்தில் இருந்து ‘மங்கள்யான்’ விண்கலம் எடுத்து அனுப்பிய செவ்வாய் வளிமண்டத்தின் புகைப்படத்தை இஸ்ரோ தனது பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளது.
ISRO Mangalyaan taken first picture of Mars, Mars picture taken by Mangalyaan satellite, India mission to Mars pictures, Mars Imagesm, sevvai kiraga pugaipadangal, sevvaai kiragam photos, mudhal pugaipadangal, Mars image gallery

கருத்துரையிடுக

0 கருத்துகள்