'அரவான்' படத்தைத்
தொடர்ந்து வசந்தபாலன் இயக்கத்தில் சித்தார்த், பிரித்விராஜ், வேதிகா
உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் 'காவியத்தலைவன்'. சுதந்திரத்துக்கு
முந்தைய தமிழ்நாட்டில் புகழ்பெற்றிருந்த நாடக கம்பெனிகளின் வாழ்க்கையை
பின்னணியாகக் கொண்டு இந்தப் படம் உருவாகியிருக்கிறது.
இந்தப் படத்தின் பாடல்கள் நேற்று திங்கட்கிழமை வெளியாகியுள்ளன.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் உருவாகியிருக்கும் இப்பாடல்களுக்கு ரசிகர்கள்,
விமர்சகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்திருக்கிறது.
இந்நிலையில் சென்னையில் நடந்த 'காவியத்தலைவன்' பத்திரிகையாளர் சந்திப்பில்
பேசிய ஏ.ஆர்.ரஹ்மான், "சமீபத்தில் ஈரானிய இயக்குநர் மஜித் மஜிதி அவர்களை
நான் சந்தித்தேன். அப்போது அவர் என்னிடம், ‘தற்போது நீங்கள் இசையமைக்கும்
பாடல்களெல்லாம் வெஸ்டர்ன் ஸ்டைலிலேயே இருக்கின்றதே உங்கள் மண்ணின்
கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் இசையமைக்கலாமே’ என்றார். இந்தக்
'காவியத்தலைவன்' ஆல்பம் அவரின் கேள்விக்கு பதிலாக இருக்கும்" என்றார்.
இந்தப் படத்துக்கான இசைக்கோவையில் மறைந்த கவிஞர் வாலி எழுதிய 'அல்லி
அர்ஜுனா...' என்ற 10 நிமிட பாடலுக்கு பெரிய வரவேற்பு கிடைத்திருக்கிறது.
அதோடு நீண்ட நாட்கள் கழித்து பிரபல பின்னணிப் பாடகி வாணி ஜெயராம்
'திருப்புகழ்' பாடல் ஒன்றைப் பாடியிருக்கிறார்.
எல்லாம் சரி, உலகப்புகழ்பெற்ற இயக்குநரான மஜித் மஜிதியை ஏன் ரஹ்மான்
சந்தித்தார்.
காஷ்மீர் பற்றி மஜித் மஜிதி கடந்த 7 ஆண்டுகளாக இயக்கி வந்தப் படம்
முடிந்துவிட்டது. அதற்கு இசை ஏ.ஆர்.ரஹ்மான்தான். இது தவிர மஜிதியின் அடுத்த
உலகப் படத்துக்கும் ரஹ்மானே இசையமைக்கிறார்.
Tags: AR-rahman-10-minit-song-in-Kaaviyathalaiavan-album-reflects-tamil-culture, #ARrahman, #Kaaviyathalaiavan, A R Rahman's Kaaviyathalaiavan technically has 7 songs, 7th being the 10-minute, multi-song drama, #AlliArjuna, Ar Rahman's new album
Social Plugin