Type Here to Get Search Results !

உங்கள் வீட்டு வாஷ் பேசினை பளபளப்பாக வைத்துக்கொள்ள சில டிப்ஸ்...

clean-washbasin-tips-in-tamil-veetu-kurippugal,உங்கள் வீட்டு வாஷ் பேசினை பளபளப்பாக வைத்துக்கொள்ள சில டிப்ஸ்...
உங்கள் வீட்டு வாஷ் பேசினை பளபளப்பாக வைத்துக்கொள்ள சில டிப்ஸ்...
* ஃபீனாலை வாஷ் பேசினில் சுற்றி ஊற்றி, பின் பிரஷ் கொண்டு நன்கு தேய்த்து கழுவ வேண்டும். இப்படி வாரம் ஒருமுறை செய்து வந்தால், வாஷ் பேசினில் உள்ள கறைகள் நீங்குவதுடன், வாஷ் பேசினும் நன்கு பளிச்சென்று இருக்கும்.

 
* எலுமிச்சை சாற்றினை வாஷ் பேசினில் ஊற்றி, ஊற வைத்து பின் பிரஷ் கொண்டு நன்கு தேய்த்து கழுவ வேண்டும். இதனால் வாஷ் பேசின் நன்கு நறுமணத்துடன் இருக்கும். 
* வாஷ் பேசினை தேங்காய் நார் கொண்டு தினமும் தேய்த்து வந்தால், வாஷ் பேசினில் படிந்த கறைகள் எளிதில் நீங்கிவிடும். 
* வாஷ் பேசின் கறைகள் படிந்து மஞ்சள் நிறத்தில் இருந்தால், அப்போது ப்ளீச்சிங் பொடி அல்லது நீர்மத்தைப் பயன்படுத்தி தேய்த்து கழுவினால், வாஷ் பேசின் பளிச்சென்று இருக்கும்.