ஆப்பிள் சீடர் வினிகர் - How to Make Natural Apple cider Vinegar at Home?
தேவையானவை
ஆப்பிள் - 10 nos
பனங்கற்கண்டு - 10 ஸ்பூன்
மண்பானை தண்ணீ - 1 லி
செய்முறை
* முழு ஆப்பிளை (தோல், காம்பு, விதையுடன்) நன்றாக கழுவி தண்ணீ போக துடைக்கவும்.
* பிறகு துண்டகள் (தோல், காம்பு,விதையுடன்) போட்டு கண்ணாடி ஜாடியில் போட்டு, சர்க்கரையை தண்ணீல கலந்து ஜாடியில் ஊற்றவும் ஆப்பிளுக்கு மேல் 2-3 இன்ச் தண்ணீ இருக்கனும்ங்க.
* காடா துணி கொண்டு இறுக்கமாக கட்டி மூடி போட்டு இருட்டான இடத்தில் வைக்கவும்ங்க. அவ்வப்போது ஜாடியை திறந்து கலந்து விடவும்ங்க.
* மூன்று வாரங்கள் கழித்து காடா துணியில் வடித்து மேலும் ஒரு மாதம் இருட்டான இடத்தில் மூடி வைக்கவும்ங்க.
* ஒரு மாதம் கழித்து ஆப்பிள் சீடர் வீனிகர் உபயோகிக்கலாம்ங்க.
* பனங்கற்கண்டுக்கு பதில் பனஞ்சர்க்கரை (அ) தென்ன சர்க்கரை உபயோகிக்கலாம்ங்க.
* விருப்பப்பட்டால் அப்பிளுடன் லவங்கபட்டையும் சேர்க்கலாம்ங்க.
* தினமும் ஒரு கிளாஸ் சுடு தண்ணீல ஒரு ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகர் சேர்த்து குடிக்கலாம்ங்க.
* யாரெல்லாம் ஆப்பிள் சீடர் வினிகர் சாப்பிட வேண்டாம்?
குறிப்பா அல்சர், குழந்தை வேண்டும் என எதிர்பார்ப்பவர்கள், ஏதாவது நோய் காரணமாக மருந்து எடுப்பவர்கள், கர்பிணிகள் அருந்தக் கூடாதுங்க.
* இதை கட்டாயம் தண்ணீரில் கலந்து குடிக்கனும்ங்க அப்படியே எடுக்க கூடாதுங்க.
* உபயோகிக்கிர பொருட்கள் அனைத்தும் சுத்தமா துளி கூட ஈரமில்லாமல் இருக்கனும்ங்க.
* ஆப்பிள் சிறிது காய் வெட்டாக இருந்தால் நல்லதுங்க.
Author: Jamuna Rajesh