இயற்கை முறையில் களைக்கொல்லி
கோரை புல்லை அழிப்பது எப்படி..? கோரை, அருகு போன்ற களைகளை அழிக்கும் இயற்க்கை களைகொல்லி..
மாட்டு கோமியம் + கடுக்காகொட்டை + எலுமிச்சம்பழம் இவை மூன்றையும் கலந்து தயார் செய்யவேண்டும்.
செய்முறை
13௦ லிட்டர் கோமியத்தை சேகரித்து பிளாஸ்டிக் தொட்டியில் உற்றி மழை, வெய்யல்படாமல் ஒரு மாதம் வைத்திருக்கவும். தொட்டியின் மேல் பகுதியை சணல் சாக்கு கொண்டு மூடி வைக்கவும்.
3 கிலோ கடுக்காய் கொட்டை( பொடியாக வாங்க கூடாது) வாங்கி ( கிலோ 80 ரூபாய்க்கு கிடைக்கும்) இடித்து வைத்து கொள்ளுங்கள்.
10 லிட்டர் கோமியம் (சேகரித்து ஒரு மாதத்திற்கும் மேல் ஆனது) எடுத்து அதை பிளாஸ்டிக் வாளியில் ஊற்றி அத்துடன் இடித்து வைத்த கடுக்காய் கோட்டையை கொட்டி நன்றாக கலக்கவும். அத்துடன் 1௦ எலுமிச்சை பழத்தை பிழிந்து கலக்கவும். எலுமிச்சை பழதோலையும் அந்த கலவையில் போட்டு கலக்கவும். இவற்றை 15 நாட்கள் ஊற விடுங்கள். தினமும் இரண்டு முறை கலக்கி விட வேண்டும்.
தெளிப்புமுறை-
15 நாட்கள் ஊற வைத்த கடுக்காய், எலுமிச்சை கலந்த கலவையை துணியில் வடிகட்டி எடுத்து கொள்ளுங்கள். ஒரு மாதம் ஆனா பழைய கோமியம் 7௦ லிட்டர் எடுத்து அதில் கலவையை சேர்த்து கலக்கவும்.(களைகள் முற்றி இருந்தால் 5௦ லிட்டர் சிறுநீர்) கைத்தெளிப்பானை எடுத்து கொண்டு அதில் இந்த கலவையை ஊற்றி களைகளின் அனைத்து பகுதியிலும் படும்படி நன்றாக தெளிக்க வேண்டும். தெளித்த ஒரு வாரத்தில் களைகள் கருக ஆரம்பிக்கும்.
குறிப்பு- கடுக்காய் கொட்டையை உடைக்கும் பொழுது மூக்கை துணியில் கட்டி கொள்ளுங்கள். அதன் துகள்கள் சுவாசகுழாயின் வழியே நமது உடலுக்குள் சென்றால் காய்ச்சல் வரும்.
தெளிப்பிர்க்கு கைத்தெளிப்பானை மட்டுமே பயன்படுத்த வேண்டும். தெளிக்கும் பொழுது பயிரின் மேல் படாமல் பார்த்து கொள்ளவேண்டும்.
தெளிப்பிர்க்கு முதல் நாள் தண்ணீர் பாய்ச்சவேண்டும். தெளித்த பின்பு 5 நாட்களுக்கு தண்ணீர் பாய்ச்ச கூடாது.
காலை 7 மணி முதல் 10 மணி வரைதான் தெளிக்க வேண்டும்.