ஏதோ ஒரு காரணத்திற்காக காவல்துறை ஓட்டுனர் உரிமத்தை பறித்துக் கொண்டால் ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனத்தை ஓட்ட முடியுமா?
ஒரு நபர் இந்த கேள்வியைக் கேட்டுள்ளார் அவரது ஓட்டுநர் உரிமத்தை ஒரு காவல்துறை அதிகாரி பறித்து வைத்துக் கொண்டு அதை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கின்றேன் என்று சொல்லியுள்ளார். ஆனால் அதைச் செய்யாமல் காலம் தாழ்த்தி உள்ளார். அதனால் அந்த ஓட்டுநர் உரிமத்தை இழந்த நபர் ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனத்தை ஓட்ட முடியுமா என்ற இந்தக் கேள்வியைக் கேட்டுள்ளார்.
மோட்டார் வாகன சட்டம் பிரிவு 19 உட்பிரிவு 1-ன்படி ஒரு காவல்துறை அதிகாரிக்கு உத்தரவு இல்லாமல் ஓட்டுனர் உரிமத்தை பறித்து வைக்க அதிகாரம் கிடையாது.
பறிக்கப்பட்ட ஓட்டுனர் உரிமத்திற்கு பதிலாக ஒரு ஒப்புகை சீட்டு வழங்க வேண்டும் அந்த ஒப்புகை சீட்டை வைத்துக் கொண்டு வாகன ஓட்டி வாகனத்தை ஓட்டலாம். ஒப்புகைச் சீட்டின் கால அளவை நீட்டிப்பதற்கு காவல்துறைக்கும் நீதிமன்றத்திற்கு அதிகாரம் இருக்கின்றது.
ஆகவே ஓட்டுநர் உரிமம் பறிக்கப்பட்டால் ஒப்புகைச் சீட்டை வைத்துக் கொண்டு வாகனத்தை ஓட்டலாம்.
நன்றி
சட்ட பஞ்சாயத்து இயக்கம்