ஆன்லைனில் ரெடிமேட் அடைகளை ஆர்டர் கொடுத்துவிட்டு சைஸ் பொருந்தாமல் அவதிப்போடுவோர் இனி கவலை பட தேவையில்லை.
ஆன்லைனில் ரெடிமெட் துணிகளை ஆர்டர் செய்ய அளவு சரியா தெரியலை என்று திணறுபவர்களுக்கும், ஆன்லைனில் ரெடிமேட் அடைகளை ஆர்டர் கொடுத்துவிட்டு சைஸ் பொருந்தாமல் வாங்கியதை திருப்பி அனுப்பி அவதிப்போடுவோர்களுக்கும் உதவும் வகையில் புது மொபைல் ஆப் ஒன்றை அறிமுகம் செய்துள்ளனர். அதன் பெயர் " ஸுஸுசூட்".
ஆடையை கச்சிதமாக தேர்வு செய்ய
இந்த ZOZOSuit அப்ளிகேஷன் வழியாக நம்மை புகைப்படம் பிடித்தால், நம் உடம்பிலுள்ள அனைத்து பாகங்களில் அளவையும் துல்லியமாக அளவிடுவதுடன் நாம் வாங்க தேர்வு செய்யும் ஆடை அளவில் நமது உடம்புக்கு பொருத்தமாக இருக்குமா என்பதையும் கச்சிதமாக காட்டி விடுகிறது.
ஜப்பான் நாட்டின் இணைய வர்த்தக நிறுவனமான ஸ்டார்ட் டுடே, நியூசிலாந்தின் ஆடை வடிவமைப்பு நிறுவனமான ஸ்ட்ரெட்ச் சயின்ஸ் உடன் இணைந்து இந்த அப்ளிகேஷனை உருவாக்கியுள்ளது.
இது மனிதனின் உடலமைப்பை ஸ்மால், மீடியம், லார்ஜ், எஸ்சல், டபுள் எக்ஸல் என்று மட்டும் வகைப்படுத்தாமல் துல்லியமாக கணித்து 15 ஆயிரம் உடலமைப்பாக வகையிட்டுள்ளதால் இதன் கணிப்பு கனகச்சிதமாக பொருந்துகிறது.
விளம்பரப்படுத்தும் நோக்கில் தற்பொழுது இந்த அப்ளிகேஷனை இலவசமாக பதிவிறக்கி பயன்படுத்த அனுமதித்துள்ளனர்.
உங்க நாட்டிற்கு தருகிறார்களா என அவர்களது இணையத்திற்கு சென்று செக் செய்துகொள்ளுங்கள்.
Social Plugin