வேப்பம்பூ இட்லி சாத பொடி
செய்ய தேவையானவை:
வேப்பம் பூ, உளுந்து தலா அரை கப்,
மிளகாய் வற்றல் - 10
கடலை பருப்பு - 1 கப்
துவரம்பருப்பு - 1 கப்
பெருங்காயம் - சிறு துண்டு
சீரகம் - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
இட்லி சாத பொடி செய்முறை:
மேலே குறிப்பிட்டுள்ள பொருட்களில் உப்பை தவிர மற்ற அனைத்தையும் வெறும் வாணலியில் தனித்தனியே சிவக்க வறுத்தெடுத்து வைத்துக்கொள்ளுங்கள். சூடு ஆறியதும் அனைத்தையும் ஒன்றாக கலந்து தேவையான அளவு உப்பு சேர்த்து கரகரப்பாக அரைத்தெடுங்கள்.இந்த வேப்பம் பூ பொடியை சாதத்தில் நெய்யுடன் சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும். உடலுக்கு ஆரோக்கியம் தரும் சிறந்த சுவையான சாத பொடி இது. சர்க்கரை வியாதிக்கு சிறந்த மருந்து.
Social Plugin