Type Here to Get Search Results !

புதிய மண் பாத்திரங்களை சமையலுக்கு பழக்குவது எப்படி?

புதிதாக வாங்கிய மண் பாத்திரங்களை சமையலுக்கு பழக்குதல் மிக எளிது...


புதிய மண் பாத்திரங்களை சமையலுக்கு பழக்குவது எப்படி? மண் பானை, மண் வடை சட்டி, மண் பணியார சட்டி  
சமையல் மண் பானை, மண் வடை சட்டி, மண் பணியார சட்டி இவைகளை சமையலுக்கு நேரடியாக உபயோகிப்பதற்கு முன் அவற்றை ஒரு சில நாட்களுக்கு பக்குவப்படுத்தவேண்டும். இதையே
மண் பாத்திரங்களை சமையலுக்கு பழக்குதல் என சொல்கிறன்றனர். அவ்வாறு பக்குவப்படுத்தாமல் உபயோகித்தல் சமைக்கும் பொது உபயோகிக்கும் எண்ணை பாத்திரத்தினுள் ஊறி சமையலுக்கு சரிவர இருக்காது. ஆகையால், மண் பாத்திரங்களை எவ்வாறு பக்குவப்படுத்துவது என சில டிப்ஸ்களை பார்ப்போம்.. 
  • பாத்திரத்தினுள் வடித்த கஞ்சி சூடாக தினம் ஊற்றினால் சிறிது நாளில் பழகிவிடும்.
  • பானையில் தண்ணீர் ஊற்றி 1 வாரம் அடுப்பில் காய வைக்கலாம்.
  • புதிய மண் பாத்திரங்களை மண் மற்றும் எண்ணைப் பசை போகக் கழுவிவிட்டு அவற்றை விட‌ பெரிய‌ தொட்டி அல்லது டப்பில் போட்டு அதில் மூன்று நாள் அரிசி கழுவிய‌ தண்ணீரை ஊற்றி வைக்கவும். தினமும் அரிசி கழுவிய கழுநீரை மாற்ற‌ வேண்டும், நான்காம் நாள் அரிசி கழுவிய‌ தண்ணீரோடு மண் பாத்திரங்களை அடுப்பில் வைத்து நன்கு கொதிக்க‌ வைக்கவேண்டும். மறு நாள் நன்கு கழுவிவிட்டு பயன்படுத்தலாம். கேஸ் அடுப்பிலும் வைக்கலாம். ஆனால் வெறும் மண் பாத்திரங்களாக‌ வைக்கக் கூடாது.
எப்படி புது மண் பாத்திரங்களை சமையலுக்குப் பழக்கி எடுக்கனும் என தெரிந்துகொண்டீர்களா!  இது குறித்து உங்களுக்கு மேலும் டிப்ஸ் தெரிந்தால் கமெண்டில் தெரிவிக்கவும்...