பிரபல ஆன்லைன் விற்பனை ஜாம்பவானாக திகழும் அமேசானையே ஏமாத்தி ஐம்பது லட்ச ரூவா சம்பாதிச்சிருக்கான் டெல்லியை சேர்ந்த ஒருத்தன்.
அதாவது ஒரு ஐபோன அமேசானில் ஆர்டர் போட வேண்டியது. டெலிவரி ஆன உடனே "யோவ் என்னய்யா
வெறும் டப்பாவ அனுப்பி உட்ருக்கீங்க. ஒழுங்கு மரியாதையா காச குடு"ன்னு
கஸ்டமர் கேருக்கு போன போட்டு கேக்க வேண்டியது.
அவனும் குடுத்துட்டான். ஐ இது நல்ல பிசினஸா இருக்கேன்னு சொல்லி. வேற வேற
நம்பர்லேர்ந்து ஆர்டர போட்டு இதே மாதிரியே பண்ணிட்டு இருந்துருக்கான்.
அந்த மொபைல OLXல வித்துர வேண்டியது. இது மாதிரி 2017 ஏப்ரல் - மே கேப்புல மட்டும் 50 லட்ச ரூவா சம்பாதிச்சிருக்கான்.
ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு அட்ரஸ் குடுக்க வேண்டியது. இவன் தெருலேர்ந்து
பக்கத்து தெருல ஒரு அட்ரஸ போட வேண்டியது. டெலிவரி பாய் வரும்போது, நைசா
போன்ல பேசி இவன் வீட்டு பக்கம் வரசொல்லி பொருள வாங்கிருக்கான். இதை வெச்சி தான் கண்டுபுடிச்சிருக்காங்க.
Source: https://www.ndtv.com/delhi-news/he-ordered-166-phones-and-claimed-refunds-how-delhi-man-duped-amazon-1761329
Social Plugin