Type Here to Get Search Results !

உடலின் ஒட்டுமொத்த நாடிகளையும் வளப்படுத்தும் குசா தோப்புக்கரணம் எப்படி போடுவது என தெரியுமா?

உடலின் ஒட்டுமொத்த நாடிகளையும் வளப்படுத்தும் குசா தோப்புக்கரணம் எப்படி போடுவது என தெரியுமா? kusa thoppukaranam, udalin anaitthu nadigalaiyum valapadutthum thoppu karanam, important yoga in tamil  

சாதாரணமாக, கால்கள் இரண்டையும் ஒன்றொக்கொன்று இணையாக வைத்தே தோப்புக் கரணம் இடுவார்கள். ஆனால், இங்கு குறிப்பிட்டதுபோல் ஒரு காலுக்கு முன் அடுத்த காலை வைத்து தோப்புக் கரணம் இடுதல் குசா முறையில் அமைந்த தோப்புக் கரணம் ஆகும்.

சாதாரண தோப்புக் கரணத்தைப் போல் குறைந்தது 100 மடங்கு பலன் தரக் கூடியதே சித்தர்கள் அருளிய இந்தக் குசா தோப்புக் கரணம் ஆகும்.

குசா தோப்புக் கரணம் போட கிழக்கு அல்லது வடக்கு திசை நோக்கி நின்று கொள்ளவும். வலது காலை இடது காலுக்கு முன்னோ அல்லது இடது காலை வலது காலுக்கு முன்னோ வைத்துக் கொள்ளலாம். இரண்டு கைகளால் இரண்டு காதுகளைப் பிடித்துக் கொள்ளவும். இந்நிலையில் மெதுவாக நன்றாக அமர்ந்து, எழுந்து தோப்புக் கரணம் இடவும்.

கால்கள் முழுவதுமாக மடங்கும் அளவிற்கு அமர வேண்டியது முக்கியம். குறைந்தது மூன்று தோப்புக் கரணம் இடவும். முடிந்தால் 12, 24 அதற்கு மேலும் இடலாம். உடல், மனம், உள்ளத்தை அற்புத நிலையில் வைத்திருக்க உதவும் ஓர் ஒப்பற்ற வழிபாட்டு முறை. ஒவ்வொரு தோப்புக் கரணத்திற்கும் ஒரு இறை நாமத்தை கூறலாம். உடம்பை இறை நினைவுடன் வளர்த்தலே உண்மையான யோகாசனப் பயிற்சி ஆகும். உடலுடன் உயிரையும் வளர்ப்பதே இறைவனின் திருநாமம். தோப்புக் கரணம் இட்ட பின் மூச்சுக் காற்று சகஜ நிலை அடையும் வரை சற்று நேரம் ஓய்வெடுத்துக் கொள்ளவும்.

வலது காலை முன் வைத்தோ அல்லது இடது காலை முன் வைத்தோ இந்தப் தோப்புக் கரணத்தைப் போடலாம். பெண்கள் ஆண்கள் இருபாலரும் இந்தத் தோப்புக் கரணத்தால் அற்புத பலன் பெறலாம்.

via தட்ஸ்தமிழ்

Kusa Thoppukaranam video:

kusa thoppukaranam, udalin anaitthu nadigalaiyum valapadutthum thoppu karanam, important yoga in tamil