Type Here to Get Search Results !

Bank லாக்கர்களில் வைக்கப்படும் பொருட்கள் திருடுபோனால் வங்கிகள் பொறுப்பாக முடியாது

வங்கிகளில் உள்ள லாக்கர்களில் வைக்கப்படும் பொருட்கள்
திருடுபோனால், அதற்கு வங்கிகள் பொறுப்பாக முடியாது
என
ரிசர்வ்வங்கி மற்றும் பொதுத்துறை வங்கிகள் கூறியுள்ளன.

வாடகை கொடுத்து லாக்கர்களில் வைக்கப்படும் பொருட்களுக்கு
பொறுப்பேற்கவில்லை என்றால், அங்கு ஏன் பொருட்களை வைக்க
வேண்டும். வீட்டிலேயே வைத்து கொள்ளலாமே.

இது குறித்து வழக்கறிஞர் குஷ் கல்ரா என்பவர், தகவல் அறியும்
சட்டத்தின்
கீழ் கேட்ட கேள்விக்கு ரிசர்வ் வங்கி மற்றும்
19 பொதுத்துறை வங்கிகள் அளித்த பதில்:

வங்கிக்கும், வாடிக்கையாளருக்கும் லாக்கர் தொடர்பாக உள்ள
உறவானது, உரிமையாளர் மற்றும் வாடகைதாரர் என்ற
அடிப்படையில் உள்ளது. இது போன்ற சூழ்நிலையில்,
வங்கிகளில் வைக்கப்படும் பொருட்களுக்கு பொருட்களின்
உரிமையாளரே பொறுப்பாகும்.

இன்னும் சில வங்கிகள், லாக்கர்களில் வைக்கப்படும் பொருட்களை,
வாடிக்கையாளர்கள் தங்களது சொந்த விருப்பம் மற்றும் முயற்சி
ஆகியவற்றின் கீழ் வைக்கிறீர்கள் என கையெழுத்து வாங்கப்படும்.

லாக்கர்களில் வாடகைக்கு எடுக்கப்படும் போது, அதில்
வைக்கப்படும் பொருட்களுக்கு ஏற்படும் இழப்பு அல்லது சேதம்
ஆகியவற்றிற்கு வங்கி நிர்வாகம் பொறுப்பாகாது.

போர், உள்நாட்டு பிரச்னை, திருட்டு, கொள்ளை போன்ற
சூழ்நிலைகளிலும் வாடிக்கையாளர்கள் தங்களது சொந்த
விருப்பத்தின் பேரில் தான் வைக்க வேண்டும் என்பது அனைத்து
வங்கிகளிலும் உள்ள பொதுவான நடைமுறை.
இவ்வாறு அந்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேல்முறையீடு:

இந்த விதிமுறைகளை எதிர்த்து குஷ் கல்ரா மேல்முறையீடு
செய்துள்ளார்.

அதில், லாக்கர்களில் உள்ள பொருட்கள் மூலம் வாடிக்கையாளருக்கு
ஏற்படும் இழப்பு அல்லது சேதம் குறித்து கணக்கெடுத்து ஆய்வு
செய்ய ரிசர்வ் வங்கி உத்தரவு ஏதும் பிறப்பிக்கவில்லை.

வாடகை கொடுத்து லாக்கர்களில் வைக்கப்படும் பொருட்களுக்கு
பொறுப்பேற்கவில்லை என்றால், அங்கு ஏன் பொருட்களை வைக்க
வேண்டும். வீட்டிலேயே வைத்து கொள்ளலாமே.

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, சிண்டிகேட்
வங்கி, அலகாபாத் வங்கி, உள்ளிட்ட வங்கிகள் கூட்டணி அமைத்து
செயல்படுகின்றன.

நுகர்வோரின் நலனை பாதிக்கும் வகையிலும், போட்டியை தவிர்க்கும்
வகையிலும் இந்த வங்கிகள் கூட்டணி அமைத்து செயல்படுகின்றன.
இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என அவர் கோரிக்கை
விடுத்துள்ளார்.
-
---------------------------------
நன்றி தினமலர்