அடர்த்தியான, அழகான புருவங்களை பெற வேண்டுமா? இவற்றை தடவி வாருங்கள்..
புருவம் மெலிதாக இருந்தால் கண்கள் எவ்வளவு அழகாய் இருந்தாலும் எடுபடாது. அடர்த்தியான புருவமும் இமையும் சிறிய கண்களையும் அழகாய் காண்பிக்கும். அடர்த்தியான புருவம் பெற இங்கே சொல்லப்பட்டிருக்கும் குறிப்புகளை பயன்படுத்தி பாருங்கள். ஏதோ ஒரு நாள் செய்து இன்னொரு நாள் செய்யாவிட்டால் எதுவுமே பலனளிக்காது. தொடர்த்து செய்யும்போது மட்டுமே எதுவும் பலன் தரும். ஆகவே விடாமல் செய்து பாருங்கள் மிக விரைவில் உங்கள் புருவம் அடர்த்தியாக மாறும்.
பால் :
மிக எளிதில் கிடைக்கக் கூடியது. ஒரு பஞ்சினால் பாலில் நனைத்து புருவத்தின் மீது தடவுங்கள். 15 நிமிடம் கழித்து கழுவவும். பாலிலுள்ள “வே புரோட்டின்” மற்றும் கேசின் புருவ வளர்ச்சியை தூண்டும்.
வெங்காய சாறு :
வெங்காய சாற்றை ஒரு நாள் விட்டு ஒரு நாள் புருவத்தில் தடவி வாருங்கள். வெங்காயத்தில் “சல்ஃபர்”, “செலினியம்” அதிகம் உள்ளது. இவை கூந்தலின் வேர்க்கால்களுக்கு பலம் அளிக்கும். இதனால் உதிராத பலமான புருவம் கிடைக்கும்.
கற்றாழை :
கற்றாழையின் சதைப் பகுதியை எடுத்து புருவத்தில் தடவ வேண்டும். காய்ந்ததும் கழுவுங்கள். கற்றாழையிலிள்ள ” அலோனின் ” என்ற பொருள் கெரட்டின் போன்றது. முடி வளர்ச்சியை அதிகரிக்கச் செய்யும்.
விளக்கெண்ணெய் :
விளக்கெண்ணயை தினமும் கண்ணிமை மற்றும் புருவத்தில் தடவி மசாஜ் செய்து வந்தால் விரைவில் அடர்த்தியான புருவம் கிடைக்கும். இது பழமையான குறிப்பாக இருந்தாலும் மிகவும் நல்ல பலனளிக்கக் கூடியது.
வைட்டமின் எண்ணெய் :
புருவம் அடர்த்தியாக வளர தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் மற்றும் விட்டமின் ஈ ஆகியவைகள் இருந்தால் போதும். தேங்காய் எண்ணெய் மற்றும் விளக்கெண்ணெய் அருமையான வளர்ச்சியை புருவத்திற்கு அளிக்கும். விட்டமின் ஈ போஷாக்கினை கொடுத்து, புருவ வளர்ச்சியை தூண்டச் செய்கிறது.
தேவையான பொருட்கள் :
தேங்காய் எண்ணெய் - 1 டீ ஸ்பூன்
விட்டமின் ஈ ஆயில் - அரை டீஸ்பூன்
விளக்கெண்ணெய் - 1 டீஸ்பூன்
மஸ்காரா பிரஷ் - 1
மேலே சொன்ன எண்ணெய்கள் எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து ஒரு பாட்டிலின் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். மஸ்காரா பிரஷில் அந்த எண்ணெயை குழைத்து, பிரஷ்ஷினால், புருவத்தில் பூசுங்கள். தினமும் இரவில் பூசி வாருங்கள். இந்த எண்ணெயை இமைகளுக்கும் பூசலாம். நீங்கள் பிரஷினால் தீட்டும் அதே வாகில் முடி வளர்ந்து, புருவம் அடர்த்தியாய் காண்பிக்கும். ஒரு மாதத்தில் அழகான புருவம் கொண்ட பெண்ணாக நீங்கள் இருப்பது உறுதி.
நிரந்தர புருவம்
சிலருக்கு புருவத்தில் முடியே இருக்காது. புருவ முடி உதிர்ந்து விட்டதே அல்லது எனக்கு புருவத்தில் முடி இல்லையே எனக் கவலையே பட வேண்டாம். விளக் கெண்ணெயை லேசாகச் சூடு செய்து புருவத்தில் தடவி மசாஜ் செய்தால் முடிகள் நன்றாக வளரும். ஐபுரோ ஒயில் வாங்கி வந்து அதை புருவத்தில் தடவி மசாஜ் செய்தால் விரைவில் முடி முளைத்து புருவங்கள் அழகாகும்.
புருவமே இல்லாதவர்கள் நிரந்தரமாக புருவத்தை அமைத்துக் கொள்ள ஐபுரோ டாட்டூ முறையைப் பயன்படுத்திக் கொள்வது நல்லது. ஐபுரோ டாட்டூ என்பது புருவங்கள் உள்ள இடத்தில் டாட்டூ பிக்மென்டேஷனை நிரப்பி நிரந்தரமாக புருவங்களை அமைக்கும் மேக்கப்பாகும். இதனால் முகத்திற்கு அழகு கிடைப்பதுடன் உங்களுடைய மனக்குறையும் அகன்றுவிடும்.
எந்த ஒரு காரணத்துக்காகவும் சருமம் வறட்சி அடையாமல் பார்த்துக் கொள்வது அவசியம். பச்சைக் காய்கறிகள், கீரைகள், பால், தயிர், மோர் போன்றவை அன்றாட உணவில் தவறாமல் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
புருவம் பலன், புருவத்தில் முடி வளர, புருவம் in english (Eyebrow), புருவம் அடர்த்தியாக வளர, கண் இமை முடி வளர, புருவம் எடுப்பது எப்படி
கண் இமை அடர்த்தியாக வளர, கண் புருவம், புருவ முடி
Social Plugin