தேவையான பொருட்கள்
- பருத்திக் கொட்டை - 100 கிராம்
- பச்சரிசி – 3 டேபிள்ஸ்பூன்
- வெல்லம் - 300 கிராம்
- சுக்கு – சிறிது அளவு
- தேங்காய் துருவல் - தேவையான அளவு
பருத்திக் கொட்டையை நன்கு ஊறவைத்து மிக்சியில் மீண்டும் மீண்டும் அரைத்து பால் எடுத்துக் கொள்ளவும். பச்சரிசியை சிறிது நேரம் ஊறவைத்து மிக்சியில் அரைத்து கொள்ளவும். அரைத்த பச்சரிசி மாவை பருத்தி பாலுடன் கலந்து அடுப்பில் ஏற்றி கிளறிக் கொண்டே இருக்கவும்.
பால் கலவை சிறிது கெட்டியாக பொங்கி வரும் போது வெல்லம் கலந்து கிளறிக் கொண்டே இருக்கவும். வெல்லத்திற்கு பதிலாக கருப்பட்டியும் சேர்க்கலாம். வெல்லம் முழுதும் கரைந்தவுடன் தேங்காய் துருவல், சுக்கு சேர்த்து கிளறி சிறிது நேரம் கழித்து இறக்கவும். சூடான சுவையான பருத்திப் பால் தயார்.
பருத்திப்பால் செய்முறை விளக்கத்துடன் மேலும் சில காணொளிகள் ...
'உங்கள் கிட்சன் எங்கள் செஃப்' நிகழ்ச்சியில் பருத்திப்பால் செய்முறை
'மதுரை ஸ்பெஷல் பருத்தி பால்' செய்முறை விளக்கம்
பருத்திப்பால் பயன்கள் | நன்மைகள் (Paruthi Paal benefits in tamil)
- பருத்திப் பாலில் B-complex சத்து அதிகம் இருக்கிறது.
- பசி உணர்வை கட்டுப்படுத்தும்.
- நெஞ்சு சளியை குறைக்கும். வெறும் வயிற்றில் பருத்திப் பால் அருந்துவது நெஞ்சுசளிக்கு நல்ல மருந்து.
- அதிகமா மூட்டை தூக்கறவங்களுக்கு நெஞ்சில ஒரு வலி வரும் பாருங்க, அந்த நெஞ்சுவலியை கட்டுப்படுத்தும்.
- உடலுக்கு குளிர்ச்சி தருவதுடன் என்றும் உடலை இளமையாக வைத்திருக்க உதவுகிறது.
Social Plugin