- சிரித்து மகிழ்ந்து வாழ்பவர் நலமுடன் வாழ்பவர்!
- அதிகாலையில் எழுபவர் நலமுடன் வாழ்பவர்!
- இயற்கை உணவை உண்டு வாழ்கிறவர் எப்போதும் நலமுடன் வாழ்பவர்!
- முளைகட்டிய தானியங்களை உணவில் பயன்படுத்துகிறவர் நலமுடன் வாழ்பவர்!
- மண்பானைச் சமையலை உண்பவர் நலமுடன் வாழ்பவர்!
- உணவை நன்கு மென்று உண்பவர் நலமுடன் வாழ்பவர்!
- உணவில் பாகற்காய், சுண்டைக்காய், அகத்திக்கீரை சேர்த்துக் கொள்பவர் நலமுடன் வாழ்பவர்!
- வெள்ளை சர்க்கரையை உணவு பண்டமாக ஏற்றுக்கொள்ளாதவர் நலமுடன் வாழ்பவர்!
- கோலா, கலர்பானங்களை அதிகம் உபயோகிக்காதவர் நலமுடன் வாழ்பவர்!
- மலச்சிக்கல் இல்லாதவர் நலமுடன் வாழ்பவர்!
- கவலைப்படாத மனிதன் நலமுடன் வாழ்பவர்!
- நாவடக்கம் உடையவன் நலமுடன் வாழ்பவர்!
- படுத்தவுடன் தூங்குகிறவர் நலமுடன் வாழ்பவர்!
- எந்த வீட்டில் ஃப்ரிட்ஜ் இல்லையோ அந்த வீட்டார் எல்லாரும் நலமுடன் வாழ்பவர்!
- தினம் ஒரு மணிநேரம் மௌனம் அனுசரிப்பவர் நலமுடன் வாழ்பவர்!
- கோபம் இல்லாமல் நிதானத்தோடு வாழ்பவர் நலமுடன் வாழ்பவர்!
- கற்பு நெறி தவறாது வாழ்பவர் என்றும் நலமுடன் வாழ்பவர்!
- மன்னிக்கிறவர், மன்னிப்பு கேட்கிறவர் நலமுடன் வாழ்பவர்!
- ஈகை மனப்பான்மையை வளர்ப்பவர் நலமுடன் வாழ்பவர்!
- வளையாத முதுகுத்தண்டுடன் நிமிர்ந்து உட்கார முடிந்தவர் நலமுடன் வாழ்பவர்!
- இடது பக்கமாக படுத்து காலை நீட்டி நித்திரை செய்பவர் நலமுடன் வாழ்பவர்!
- தூங்கி எழுந்ததும் காலை 2டம்ளர் சுத்தமான தண்ணீர் பருகுபவர் நலமுடன் வாழ்பவர்!
- உணவு உண்ண வேண்டிய முறையறிந்து உண்பவர் நலமுடன் வாழ்பவர்!
- வாழ்க்கையில் நம்பிக்கை, பொறுமையுடன் வாழ்பவர் நலமுடன் வாழ்பவர்!
- 10 நாட்களுக்கு ஒருமுறை உண்ணா நோன்பு இருப்பவர் நலமுடன் வாழ்பவர்!
இந்த 25 பழக்கங்களையும் தவறாமல் கடைபிடிப்பவர் நலமுடன் வாழ்பவர்
யார் நலமுடன் வாழ்பவர்?
Tags
Social Plugin