உலக மாந்தன் முதல் முதலில் பயன்படுத்திய உயிர் ஒலிகள்
அ(படர்க்கை),
இ(தன்னிலை),
உ(முன்னிலை)
என்பது பாவாணர் கருத்து.
க, ச, ட, த, ப, ற - ஆறும் வல்லினம்.
ங, ஞ, ண, ந, ம, ன - ஆறும் மெல்லினம்.
ய, ர, ல, வ, ழ, ள - ஆறும் இடையினம்.
தமிழின் மெய் எழுத்துக்களில் வல்லினத்தில் ஒன்றும், மெல்லினத்தில் ஒன்றும், இடையினத்தில் ஒன்றுமாக மூன்று மெயெழுத்துக்களைத் தேர்ந்தெடுத்தனர்.
அவை த், ம், ழ் என்பவை.
இந்த மூன்று மெய்களுடன் உலகின் முதல் உயிரெழுத்துக்களை வரிசைப்படுத்தி முறையே கூட்டி
த் + அ கூடி 'த' வாகவும்,
ம் + இ கூடி 'மி' யாகவும்,
ழ் + உ கூடி 'ழு' வாகவும்
என்று தமிழு என்று ஆக்கி, பிறகு கடையெழுத்திலுல்ல உகரத்தைத் நீக்கி "தமிழ்" என்று அழைத்தனர்.
Tamil elutthu peyar pirandha kadhai, Tamil peyar vilakkam, Tamil meaning, Tamil ilakkanam, vallinam, mellinam, idaiyinam ezhutthu
Social Plugin