மருத்துவரிடம் ஊசி போட்டுக்கொள்ளலாமா, வேண்டாமா?
நோய் வந்தால் மருத்துவரிடம் செல்லும் போது அவர் ஊசி போடுவது வழக்கம், எல்லா தருணங்களிலும் ஊசி போட்டுக்கொள்வது தேவையற்றது.
பெரும்பாலான நிலைமைகளில் ஊசி தேவைப்படுவதே இல்லை.
சரி, எப்பொழுது ஊசி போட்டுக்கொள்ளவேண்டும்:
- பரிந்துரை செய்யப்பட்ட மருந்து, மாத்திரை அல்லது திரவ வடிவில் கிடைக்காத போதுதான் அதை ஊசி மூலம் போட வேண்டும். உதாரணமாக பென்சிலின் மருந்து மாத்திரை வடிவில் கிடைத்தால் பென்சிஸிலின் ஊசி போட வேண்டியதில்லை.
- மருந்தை விழுங்க முடியாமல் இருக்கும் பொழுது ஊசி போடலாம்.
- மயக்கமடைந்திருக்கும் பொழுது ஊசி போடலாம்.
ஒரு டாக்டர் உங்கள் ரத்தத்தை பரிசோதிக்கமால் வைட்டமின் ஊசிகள், கல்லீரல் சாறுகள், அல்லது B12 ஊசிகளை சிபாரிசு செய்தால் அவரிடம் நீங்கள் வேறு ஒரு டாக்டரை பார்க்கப்போவதாக சொல்லிவிடுங்கள். வைட்டமின்களை ஊசியாக போடுவது மிகவும் ஆபத்தானது. அதைவிட உட்கொள்வது பாதுகாப்பானது.
ஊசிக்கு பதில் மருந்துகளை தருமாறு உங்கள் டாக்டரை வேண்டி கேட்டுக்கொள்ளுங்கள்.
maruthuva kelvigal, injection vs pils, medicine, doctor-injection-is-necessary-or-not, maathirai, marundhu, syringe, If the disease go to the doctor and he put the needle used to inject the occasion by wearing unnecessary. In most cases the injection is not necessary, B12 injections
Social Plugin