விமானத்தின் ஜன்னல்கள் ஏன் வட்டமாக இருக்கின்றன?
நீங்கள்
விமானத்தில் பயணித்திருக்கலாம், அல்லது படங்களிலாவது பார்த்திருக்கலாம்.
அப்போது, விமானத்தின் ஜன்னல்கள் வட்டமாக இருப்பதை கவனித்திருக்கலாம்.
ஏன் அவ்வாறு விமான ஜன்னல் வட்ட வடிவில் இருக்கிறது என்று யோசித்திருக்கிறீர்களா?
இது யதேச்சையான வடிவமைப்பு கிடையாது. இதற்கு அறிவியல் ரீதியான காரணம் இருக்கிறது.
விமானம் வானில் பறக்கும்போது, உயர் அழுத்தப் பிரச்சினைக்கு உள்ளாகும்.
விமானத்தின் வெளியே அழுத்தம் குறைவாகவும், விமானத்தின் உள்ளே அழுத்தம்
அதிகமாகவும் இருக்கும்.
விமானத்தின் ஜன்னல்கள் வட்டமாக இருப்பதால்,
விமானத்தின் உள்ளே ஏற்படும் அழுத்தமானது அனைத்து இடங்களுக்கும் பரவி
விடும். இதனால், விமானத்தின் உள்ளே இருப்பவர்களுக்கு எவ்விதப் பாதிப்பும்
ஏற்படாது.
மாறாக விமானத்தின் ஜன்னல்கள் சதுரமாக இருந்தால்,
விமானத்தின் உள்ளே உள்ள அழுத்தம் அனைத்து இடங்களுக்கும் பரவாமல்,
ஜன்னல்களின் மூலைகளில் தாக்கி கண்ணாடியை உடையச் செய்து பெரிய
பாதிப்புகளுக்கு உள்ளாக்கிவிடக்கூடும்.
ஜன்னலின் வடிவமைப்புக்குப் பின்னே, இவ்வளவு பெரிய சங்கதி இருக்கு!
vimana jannal en vatta vadivamaaga irukkiradhu, reason for flight window in circle, round corner window in airplanes, ariviyal kaaranam, science, technical reason for air craft window design, vatta vadiva jannal, school students quiz, general knowledge in tamil
Social Plugin