தண்ணீர் தாகத்திற்க்காக சோடா குடிக்கலாமா?
மனிதன் உடம்பிலிருந்து கார்பன் டை ஆக்ஸ்சைடு(Co2) ஒவ்வொரு நொடியும் வெளியேரிக் கொண்டே இருக்கிறது. அப்படியிருக்க கார்பன் டை ஆக்ஸ்சைடு கலந்த சோடா (குளிர் பானங்கள்) நமது உடம்புக்கு எப்படி ஆரோக்கியம் கொடுக்கும்.தாகமாக இருக்கும் பொழுது 100 மில்லி சோடா குடித்தால் அதிலிருந்து பெறப்பட்ட 100 மில்லி கார்போனிக் அமிலத்தை உடம்பிலிருந்து வெளியேற்ற 200 மில்லி தண்ணீர் தேவைப்படுகின்றது. அப்படியானால் சோடா குடித்தால் எப்படி தாகம் தணியும்.
விளையாட்டு வீரர்கள் தாகம் எடுக்கும் பொழுது கட்டாயம் சோடா குடிக்கக்கூடாது. சோடாவில் ஆரோக்கியத்தின் எதிரிகளான பச்சை, சிவப்பு, கருப்பு நிற கலர், எசென்ஸ், சாக்கரின் ஆகியவற்றை சேர்த்து கலர் என்ற பெயரில் விற்பனையாகிறது. சோடாவை விட அதிலுள்ள கலர் அதிகமாக உடல் நலத்தை கெடுக்கும்.
சர்க்கரைக்கு மாற்றான சாக்ரின் எதிலிருந்து தயாரிக்கப்படுகிறது தெரியுமா..?
அப்படியானால் சுத்தமான தண்ணீர் கிடைக்காத பொழுது தண்ணீர் தாகத்திற்கு எதை குடிப்பது?
100gm வெள்ளரிக்காயில் 90gm தண்ணீர் தான் இருக்கிறது. இளநீர், திராட்சை, ஆரஞ்சு போன்ற பழங்களிலும் கூட 90 சதவிகிதம் வரை தண்ணீர்தான் இருக்கிறது. இவற்றில் கிடைக்கும் தண்ணீர் மிகவும் சுத்தமானது; வைட்டமின், தாது உப்புக்கள் நிரம்பியுள்ளன. அவற்றை வாங்கி பருகலாம். இவற்றை உலகிலேயே சிறந்த ஆரோக்கியமான குடிக்கும் பானம் என்று சொல்லலாம்.
Social Plugin