பிரண்டை துவையல் செய்வது எப்படி? - Pirandai Thuvaiyal in tamil
செய்ய தேவையானவை:
1. இளசான பிரண்டைத் துண்டுகள் (நறுக்கியது) - ஒரு கிண்ணம்
2. உளுத்தம்பருப்பு - அரை ஆழாக்கு
3. காய்ந்த மிளகாய் - 4
4. புளி - நெல்லிக்காய் அளவு
5. பெருங்காயம் - அரை டீஸ்பூன்
6. உப்பு - கைப்பிடி
7. இளசான கறிவேப்பிலை - கைப்பிடி
8. நல்லெண்ணெய் - கால் குழிக்கரண்டி.
செய்முறை: இரும்புக்கடாயில் நல்லெண்ணெயை ஊற்றிக் காய்ந்ததும், பிரண்டையைப் போட்டு, நன்றாக வதக்கி வைத்துக்கொள்ளவும்.
பிறகு எண்ணெய் ஊற்றி எண்ணெயில் உளுத்தம்பருப்பு, மிளகாய், புளி, பெருங்காயம், கறிவேப்பிலையை ஒவ்வொன்றாகப் போட்டு, சிவப்பாகும் வரை வறுக்கவும். இதனுடன் வதக்கி வைத்துள்ள பிரண்டையைப் போட்டு, அம்மியில் மசிய அரைக்கவும். பிரண்டை துவையல் தயார்.
சூடான சாதத்தில், பிரண்டை துவையலைப் போட்டுக் கலந்து சாப்பிட வேண்டும்.
பிரண்டை கார குழம்பு செய்வது எப்படி? - பிரண்டை புளி குழம்பு | Pirandai Puli Kulambuகுறிப்பு: பிரண்டை நல்ல பிஞ்சாக இருக்க வேண்டும். முற்றலாக இருந்தால் சக்கை சக்கையாக இருக்கும், நாக்கு அரிக்கும்.
பிரண்டை மருத்துவப் பலன்கள்: எலும்பு முறிவு வைத்தியத்துக்கு, பிரண்டை நல்லது. மூலநோய், ஆஸ்துமா, பசியின்மை, அஜீரணம், இருமல் பிரச்னை இருந்தால் பிரண்டையை பிரண்டை துவையலாக செய்து சாப்பிடலாம். சுளுக்கு, அடிபட்ட வீக்கம் ஆகியவற்றிற்குப் பிரண்டை சிறந்தது.
Social Plugin