கூந்தல் உதிர்வதை தடுக்க:
செம்பருத்தி இலை, செம்பருத்திப் பூ, எலுமிச்சைத் தோல், ஆரஞ்சுத் தோல், வேப்பிலை, மருதாணி இலை இவற்றை நிழலில் உலர்த்தி, நன்கு அரைத்து பொடி செய்து கொள்ளுங்கள். இந்த பொடியில் முட்டை சேர்த்து தலையில் எண்ணெய் தேய்த்த பின், இந்தக் கலவையை, வேர்க்கால்களில் தடவி 20 நிமிடம் நன்கு ஊற வைத்து பின் நீரில் தலை முடியை அலசவும் இதை வாரம் ஒரு முறை செய்தால் அதிக முடி உதிர்தல் குறையும்.
கூந்தல் அடர்த்தியாக வளர:
தேங்காய் என்ணெயை சூடுபடுத்தி அதில் அரைத்த மருதாணியை சேர்த்து, காய்ச்சுங்கள். நுரை அடங்கியதும் அடுப்பை அணைத்து, வடிகட்டி அந்த எண்ணெயை தடவி வர முடி நன்றாக வளரும். கற்றாழைச் சாற்றை தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி தலைக்குத் தேய்த்து வந்தால் தலைமுடி நன்றாக வளரும். தேங்காய் எண்ணையில் கறிவேப்பிலையை நன்றாக அரைத்து காய்ச்சி தினமும் தேய்த்து வர, தலைமுடி கருப்பாக அடர்த்தியாக வளரும். எலுமிச்சம் சாற்றையும் காரட்டையும் தேங்காய் எண்ணையில் கலந்து தினமும் தடவி வந்தால் முடி நன்றாக கருப்பாக வளரும்.thalai mudi valara tips in tamil, thalai mudi neelamaga valara in tamil, koonthal valara in tamil, கூந்தல் , அதிக முடி உதிர்தல், முடி வளர, எண்ணை
Social Plugin