Type Here to Get Search Results !

வெங்காய சட்னி (வெங்காய கொத்ஸ்) - சமையல் செய்முறை

vengaya chutney samayal seimurai in tamil, Onion recipes in tamil, Vengaya koths for idli dosai, side dish for idli, south indian recipes, tamilnadu recipe, vengayam,
செய்ய தேவையானவை:
  1. பெரிய வெங்காயம் - 3
  2. உருளைக்கிழங்கு - 1
  3. தக்காளி - 1
  4. எண்ணெய் - 3 மேசைக் கரண்டி
  5. கறிவேப்பிலை - 1 கொத்து

அரைக்க:
  1. மிளகாய் - 8
  2. தேங்காய் - 4 சில், 
  3. சோம்பு - 1 தேக்கரண்டி, 
  4. சீரகம் - 1 தேக்கரண்டி,
தாளிக்க:  
கடுகு, உளுந்து - 1 தேக்கரண்டி.

செய்முறை:

வெங்காயத்தை மிகப்பொடியாக நறுக்கிக் கொள்ளவும். உருளைக்கிழங்கை பொடி ஸ்லைஸ் துண்டுகளாக நறுக்கவும். தக்காளியையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பிறகு ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்தம்பருப்பு தாளித்து பொடியாக நறுக்கியவற்றை நன்கு வதக்கவும்.

அரைக்க வேண்டியவற்றை மையாக அரைத்து எடுக்கவும். நன்கு வதங்கியதும் அரைத்த மசாலா, உப்பு போட்டு சிறிது தண்ணீர் விட்டு பச்சை வாசனை போகும்வரை கொதிக்கவிட்டு கூட்டுப்போல் வந்ததும் கறிவேப்பிலை போட்டு இறக்கவும்.

இட்லி, தோசைக்குத் தொட்டுக்கொள்ள மிகவும் சுவையானது.
vengaya chutney samayal seimurai in tamil, Onion recipes in tamil, Vengaya koths for idli dosai, side dish for idli, south indian recipes, tamilnadu recipe, vengayam,