புதினா கொழுக்கட்டை செய்ய தேவையான பொருட்கள்:
- பச்சரிசி மாவு – 1/4 கிலோ
- புதினா – 1 கப்
- பச்சை மிளகாய் – 2
- தேங்காய் நறுக்கியது – 1 கப்
- எண்ணெய் – 2 தேக்கரண்டி
- உப்பு – 2 சிட்டிகை
ஒரு மணி நேரம் பச்சரிசியை ஊற வைத்து நன்றாகக் கழுவி
வடிகட்டி விடவும். பிறகு நிழலில் உலர்த்திக் காய வைத்து அரைத்துக் கொள்ள
வேண்டும்.
பிறகு அரைத்த மாவை ஆவியில் 10 நிமிடம் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
பச்சை மிளகாய், புதினா இரண்டையும் நைசாக அரைத்துக்
கொள்ளவேண்டும். தேவையான அளவுக்குக் கொழுக்கட்டை மாவு எடுத்துக் கொண்டு
அதில் அரைத்த விழுது, உப்பு ஆகியவற்றுடன் கொதிக்கும் நீரைச் சிறிது
சிறிதாகச் சேர்த்து கெட்டியாகப் பிசைந்து கொள்ள வேண்டும். எண்ணெயில் கடுகு,
உளுந்து பெருங்காயம் தாளித்து பிசைந்த மாவில் கொட்டி பிடி
கொழுக்கட்டைகளாகப் பிடித்து ஆவியில் வேக வைக்க வேண்டும். சுவையான
புதினாக் கொழுக்கட்டை தயார்.
- ஆர். தவநிதி, அரும்பாக்கம்
Source: Dinamani E-paper
pudhina kolukattai, mint recipe,puthina kozhukattai recipe, sweetness recipe, snacks, samayal seimurai, kolukattai, healthy recipes in tamil, Tamil Recipes,Recipes,Recipes in Tamils, healthy snacks recipes in tamil language, kozhukattai recipes in tamil, kara kozhukattai recipe in tamil, how to cook kolukattai
Social Plugin