Type Here to Get Search Results !

வெள்ளரிக்காய் சட்னி - சமையல் செய்முறை (Vellarikkai Chutney - Vellarikka Recipe)

வெள்ளரிக்காய் சட்னி.. (Vellarikkai Chutney - Vellarikka Recipes - Sathana samayal in tamil)


Vellarikkai Chutney Vellarikka Recipes Sathana samayal in tamil cucumber recipe in tamil

செய்ய தேவையான பொருட்கள்:
  1. வெள்ளரிக்காய் - 1
  2. தக்காளி - 1
  3. இஞ்சி - சிறு துண்டு
  4. காய்ந்த மிளகாய் - 1
  5. தேங்காய் - ஒரு கை பிடி
  6. கொத்தமல்லி தழை - சிறிதளவு
  7. இந்துப்பு - சிறிதளவு
தாளிக்க:

  1. கடுகு
  2. உளுத்தம் பருப்பு
  3. கருவேப்பிலை
  4. எண்ணெய்

வெள்ளரிக்காய் சட்னி செய்முறை:

அடுப்பில் கடாயை வைத்து அதில் சிறிது எண்ணெய் ஊற்றி அடுப்பை சிம்மில் வைத்து சூடேற விடவும், சூடேறும் வேளையில் வெள்ளரிக்காய், இஞ்சி, தக்காளி இவைகளை நறுக்கிக்கொள்ளவும். எண்ணெய் சூடேறியதும் அதில் நறுக்கியவற்றை போடவும் மேலும் அதனுடன் ஒரு வரமிளகாய் அல்லது பச்சை மிளகாய், தேவையான அளவு இந்துப்பு சேர்த்து லேசாக வதக்கிக்கொள்ளவும்.

அடுப்பை அணைத்த பிறகு அதனுடன் தேங்காய் துருவல், சிறிது கொத்தமல்லி தழை சேர்த்து சூடு ஆரிய பிறகு மிக்ஸியில் அரைக்கவும்.

பின் ஒரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் சிறிதளவு கடுகு, உளுத்தம் பருப்பு, கருவேப்பிலை சேர்த்து தாளித்து அதை அரைத்து வைத்துள்ள வெள்ளரிக்காய் சட்னி கலவையுடன் சேர்க்கவும். இப்போது சுவையான மேலும் ஆரோக்கியமான வெள்ளரிக்காய் சட்னி தயார்.

வெள்ளரிக்காய் சட்னிக்கேத்த 'குதிரைவாலி ஊத்தாப்பம்' - சிறுதானிய சமையல் - செய்முறை
வெள்ளரிக்காய் சட்னி, (Vellarikkai Chutney - Vellarikka Recipes - Sathana samayal in tamil), cucumber recipe in tamil, easy cucumber recipes indian style, குதிரைவாலி ஊத்தாப்பம் தொட்டுக்கொள்ள சட்னி, Tamilnadu cooking book, PDF,   samayal ulagam, arusuvai samayal in tamil, vellarikkaai samayal, velrikkai dosai side dish Vellarikka Chutney.