Type Here to Get Search Results !

தாய் தகப்பன் செய்த பாவ புண்ணியம் குழந்தைகளை எவ்வாறு பாதிக்கும் என தெரிந்துகொள்வோமா.!!!

பாவம் புண்ணியம் பற்றி அறிவியல் தளத்தில் இருந்து..

EPIGENETICS என்ற மரபியல் சார்ந்த துறை எப்படி நமது மரபணுக்கள் சமூக மற்றும் சுற்றுப்புறங்களின் தாக்கங்களால் மாற்றம் அடைகிறது என்பதை பற்றி ஆராய்கிறது.

உதாரணமாக திருமணத்திற்கு முன்பு ஒருவருக்கு குடிப்பழக்கம் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம்...


அவர் தனது முன்னோர்களின் நல்ல உணவுப் பழக்கம் மற்றும் சூழ்நிலை காரணமாக நல்ல மரபணுக்களைப் பெற்று இருந்தால் அவரது உடல் குடிப்பழக்கத்தால் அதிகம் பாதிக்கப்படாமல் தப்பிக்க வாய்ப்பு உண்டு
EPIGENETICS in tamil, marabanu mattramum pazhakka vazhakkam
ஆனால் அவரது குழந்தை குடிப்பழக்கத்தால் பாதிப்பு அடைந்த தனது தந்தையின் மரபணுக்களை சுமந்து பிறப்பதால் நிச்சயம் ஆரோக்கிய கேட்டோடு இருக்கும்.

இவ்வாறு ஒருவரது எண்ணங்கள், குணங்கள், உணவு பழக்கங்கள், நோய் எதிர்ப்பு சக்தி, உடல் உழைப்பு, தீய மற்றும் நல்ல பழக்கங்கள், பலம் மற்றும் பலவீனங்கள் யாவும் அவரது மரபணுக்களை பாதிக்கும். அவரது சந்ததிகளுக்கும் தொடரும்..

இதைத் தான் மறைமுகமாக, தாய் தகப்பன் செய்த பாவம் புண்ணியம் குழந்தைகளை பாதிக்கும் என்று நம் முன்னோர்கள் சொன்னார்கள்...

"பாத்திரம் அறிந்து பிச்சை இடு
கோத்திரம் அறிந்து பெண் எடு"


 என்று சொன்னதும் இதைத் தான்.

நல்ல குடும்பத்தில் இருந்து வரும் பெண் மற்றும் ஆண் நல்ல மரபணுக்களை பெற்று இருப்பதால் சந்ததிகள் நலமோடு இருக்கும்..

நம் முன்னோர்கள் தங்கள் சீறிய வாழ்க்கை முறையால் நமக்கு உயர்ந்த வலிமையான ஆரோக்கியமான மரபணுக்களை கொடுத்து சென்று உள்ளார்கள் அதை தீய பழக்கங்களால் தானும் கெட்டு தனது சந்ததிகளையும் கெடுக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.

- Arasu Tamilarasu

EPIGENETICS marabanu, thaai thagappan seidha paava punniyam kuzhandhaigalai evvaaru padhikkum,paavam punniyam, kudi pazhakkam,  nalla pazhakkm sandhadhigalai kappaatrum, theeya pazhakkam sandhadhi kedu varum,