Type Here to Get Search Results !

டெல்லி ஒற்றை இலக்க மற்றும் இரட்டை இலக்க விதியை சமாளிக்க தீர்வு சொன்ன 13 வயது சிறுவன்!

ஒற்றை இலக்க மற்றும் இரட்டை இலக்க வாகன விதியை எளிதில் சமாளிக்க தீர்வு சொன்ன 13 வயது பள்ளி சிறுவன்!

 www.odd-even.com என்ற இணையதளம் மூலம்,  ஒருவர் தான் எங்கு செல்ல வேண்டும் என்பதை பதிவு செய்தால் ஒற்றை இலக்க கார் கொண்ட நபருடன், இரட்டை இலக்க கார் எண் கொண்ட நபர் காரை ஒருவருக்கொருவர் மாற்றி மாற்றி பகிர்ந்து கொள்ள முடியும்.

13-yr-old school boy has a Web solution to Delhi's odd even vehicle rules, 13-Year-Old Boy Designs A Carpooling Website, 13-year-old student tells you how to cope up with odd-even
டெல்லியில் காற்று மண்டலம் மிகவும் அசுத்தமடைந்து சுவாசிக்க தகுதியற்றதாக மாறி வருவதாக பல்வேறு ஆராய்ச்சி நிறுவனங்கள் அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டு வருகின்றன. இந்நிலையில் டெல்லி அரசு ஒற்றை இலக்க மற்றும் இரட்டை இலக்க விதியை அறிமுகம் செய்தது. இதன் மூலம் வாரத்தின் மூன்று நாட்களில் ஒற்றை இலக்க கார்களும், அதற்கு அடுத்த நாட்களில் இரட்டை இலக்க கார்களும் ஓடும் என அறிவித்தது. இதற்கு ஆதரவும், எதிர்ப்பும் எழுந்தன.

இந்த இலக்க விதியை சமாளிக்க தெரியாமல் பலர் தவித்து வந்தனர். அவர்களுக்கெல்லாம் சரியான தீர்வை அமிட்டி சர்வதேச பள்ளியில் படிக்கும் நொய்டாவை சேர்ந்த அக் ஷத் மிட்டல் என்ற 13 வயது சிறுவன் www.odd-even.com என்ற இணையதளம் மூலம் அளித்துள்ளான்.
delhi odd even number problem solution by 13 year old boy akshat mittal, delhi air pollution control and traffic control rules by aravind kejriwal and a intelligent solution to tackle the odd even rules by Akshat mittal odd-even.com website, Delhi news in tamil,

www.odd-even.com என்ற இணையதளம் மூலம்,  ஒருவர் தான் எங்கு செல்ல வேண்டும் என்பதை பதிவு செய்தால் ஒற்றை இலக்க கார் கொண்ட நபருடன், இரட்டை இலக்க கார் எண் கொண்ட நபர் காரை ஒருவருக்கொருவர் மாறி மாறி பகிர்ந்து கொள்ள முடியும். இதனை ஒரு முறை செல்லவோ அல்லது திரும்ப வரவோ, இரு வழி பயணத்திற்கோ தேர்ந்தெடுத்து கொள்ளலாம்.

ஒருவரது வயது, பாலினம், செல்லும் பாதை, நேரம், வேலை பார்க்குமிடம் ஆகியவற்றை தேர்ந்தெடுத்து பயணத்தை அமைத்து கொள்ளும் விதமாக இந்த இணையதளத்தை வடிவமைத்துள்ளார்.

மேலும் அதில் ஃபேஸ்புக் மற்றும் லிங்க்டு இன் பக்கத்தையும் இணைத்துக் கொள்ளலாம்.

இப்போது டெல்லிக்கு மட்டும் ஏற்ப்பாடு செய்யபட்டிருக்கும்  இந்த சேவையை  குர்கான், நொய்டாவுக்கும் நீட்டிக்க இருப்பதாகவும், மொபைல் இணையதளத்தை உருவாக்கவுள்ளதாகவும் இணையதளத்தின் நிறுவனரான 13 வயது அக் ஷத் மிட்டல் தெரிவித்துள்ளார்.

delhi odd even number problem solution by 13 year old boy akshat mittal, delhi air pollution control and traffic control rules by aravind kejriwal and a intelligent solution to tackle the odd even rules by Akshat mittal odd-even.com website, Delhi news in tamil, 13-yr-old school boy has a Web solution to Delhi's odd even vehicle rules, 13-Year-Old Boy Designs A Carpooling Website, 13-year-old student tells you how to cope up with odd-even, ottrai irattai ilakka car vidhi, vaagana vidhi