Type Here to Get Search Results !

மழை வெள்ளம் வடிந்த இடங்களில் மீண்டும் வீடுகளுக்குள் புகுவதற்கு முன் கவனிக்க வேண்டிய 10 குறிப்புகள்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கொட்டித்தீர்த்த கனமழையால், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வீடுகளை விட்டு வெளியேறிய மக்கள் வெள்ள நீர் வடிந்ததும் தங்களது வீடுகளினுள் நுழைவதற்கு முன் என்னென்ன செய்யவேண்டும் என தெரிந்துகொள்வது  நல்லது.

Safety tips for Chennai floods while people return home, minsara kasivu, veedu virisal, car insurance, bike insurance tamilnadu floods, peridar, maruthuvam, ensure power is switched off, electric leak, unavu murai, kaaichal, bedhi maathirai, first aid, mun echarikkai, #chennaifloods #chennairains
வெள்ளம் வடிந்த இடங்களில் வீடுகளில் மீண்டும் புகுவதற்கு முன் கவனத்தில் கொள்ளவேண்டிய 10 குறிப்புகள்:

1. முதலில் ஆண்கள் வீட்டினுள் நுழைந்து ஓரளவு சுத்தப்படுத்தி விட்டுப் பிறகு பெண்களை அழைக்கவும். அடுத்து முதியவர்கள்; கடைசியாகக் குழந்தைகள்.
 

2. நுழைந்த உடனேயே மின்சாரம் இருந்தாலும் உடனடியாக விளக்குகளை / மின் விசிறியை இயக்க வேண்டாம். மின் கசிவு இருக்கக் கூடும். கதவுகள், ஜன்னல்களைத் திறந்து முடிந்த அளவு இயற்கையான வெளிச்சம், காற்றோட்டத்தை அனுமதியுங்கள்.

சென்னை வழியே செல்லும் ஆறுகள், சென்னையை சுற்றியுள்ள ஏரிகள், அணை பற்றி தெளிவாக தெரிந்துகொள்ளலாமா..? 


3. வீடுகளில் எங்கேனும் விரிசல் விட்டு, கட்டுமானத்தில் பாதிப்பு இருக்கிறதா என வீட்டை சுற்றிலும் சரிபார்த்துகொள்ளுங்கள். அடுக்குமாடி குடியிருப்பில் இருப்பவர்கள் உங்கள் மொத்த கட்டிடத்தையும் சுற்றி சரிபார்துகொள்வது நல்லது. சாதாரண வெடிப்பாக இருப்பின் கூடியவிரைவில் சரிசெய்துகொண்ட பிறகு அனைவரும் உள்ளே செல்லலாம்.
 

4. மின்சாரப் பொருட்களை இயக்குவதற்கு முன்பாக வீடு முழுதும் ஒரு முறை எங்காவது மின் கசிவு இருக்கிறதா என்று சோதித்துக் கொள்ளுங்கள். இதை ஒரு எலக்ட்ரிஷியன் கொண்டு செய்வது நல்லது. நீங்களே செய்வதாக இருந்தால் போதிய பாதுகாப்புடன் (காலணி, கையுறை, மர நாற்காலி போன்றவை) மேற்கொள்ளவும்.
 

5. அருகிலுள்ள சுகாதார நிலையம் அல்லது மருத்துவ மனையில் தேவையான காய்ச்சல்/ பேதி மற்றும் தற்காப்பு மாத்திரைகளை வாங்கிக் கொள்ளுங்கள்; அறிவுறுத்தல்களின்படி தடுப்பூசிகள் தேவையென்றால் தவறாது போட்டுக் கொள்ளுங்கள்.
 

6. இரண்டொரு நாட்களுக்கு மிக எளிமையான உணவை உட்கொள்ளுங்கள். அரை வயிற்றுக்கு மட்டுமே சாப்பிடுங்கள். ஒரு பெரிய அதிர்ச்சியிலிருந்து மீண்டு வந்திருக்கிறீர்கள். உங்கள் மனமும் உடலும் சகஜ நிலைக்குத் திரும்ப அவகாசம் அளியுங்கள்.
 

7. மளிகைப் பொருட்கள் கெட்டிருக்கிறதா என்று சோதித்து விட்டுப் பயன்படுத்துங்கள். இலேசான ஐயம் இருந்தாலும், அவற்றைப் பயன்படுத்த வேண்டாம். ஃப்ரிஜ்ஜிலேயே விட்டு விட்டுப் போன பொருட்களைப் பயன்படுத்தாதீர்கள். அவை நிச்சயம் கெட்டுத்தான் போயிருக்கும்.
 

8. முழுகிக் கிடந்த வாகனங்கள் காப்பீடு செய்யப்பட்டிருந்தால், காப்பீட்டு நிறுவனத்திற்குத் தெரியப்படுத்துங்கள். வெள்ளம் அல்லது மழை நீரில் பாதிப்படைந்த காரை இயக்கி, அதனால் இன்ஜின் சேதமடைந்தால் க்ளெய்ம் தரமாட்டார்கள். நீங்கள் இயக்கிய பிறகு பழுதுபட்டதாகத் தெரியவந்தால், அவற்றிற்கான காப்பீடு கிடைக்காமல் போய்விடலாம்.

பாதிக்கப்பட்ட கார் அல்லது பைக் என எதுவாக இருந்தாலும் அதை ஒரு போட்டோ எடுத்து இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் இமெயில் முகவரிக்கு அனுப்பலாம். 

இன்ஷூரன்ஸ் குறீத்து மேலும் தெரிந்துகொள்ள : http://www.vikatan.com/personalfinance/article.php?aid=11524

9. உங்களையும், உங்கள் குடும்பத்தையும் இந்த அளவுக்குக் காப்பாற்றிய இறைவனுக்கும், அவன் அருளால் உங்களுக்கு உதவிகள் புரிந்த மனிதர்களுக்கும் நன்றி செலுத்துங்கள்.
 

10. இந்தப் பேரிடரில் உங்களைக் கைவிடாதிருந்த துணிவும், நம்பிக்கையும் வாழ்நாள் முழுதும் உங்களுக்கு இருக்க வேண்டும் என்று தீர்மானித்துக் கொள்ளுங்கள். எந்தவொரு இடரையும் சமாளித்து வெல்லும் அறிவும், திறனும் உங்களுக்கு உண்டு என்று அறிந்து அமைதி கொள்ளுங்கள்.

மழை வெள்ளத்தில் மூழ்கிய இருசக்கர வாகனத்தை எப்படி ஸ்டார்ட் செய்வது?

- Sarva Bhouman & Babu S

Mazhai vellathal padhikka patta veedugalukkul meendum nulaivadharkkul kavanikka vendiya 10 kurippugal: Safety tips for Chennai floods while people return home. neeril moozhgiya veedu, minsara kasivu, veedu virisal, car insurance, bike insurance tamilnadu floods, peridar, maruthuvam, ensure power is switched off, electric leak, unavu murai, kaaichal, bedhi maathirai, first aid, mun echarikkai, #chennaifloods #chennairains, #ChennaiFloods: Before and After