Type Here to Get Search Results !

கிர்ணி பழ பாயசம் [Kirni Payasam Recipe in tamil]

கிருணி பழ பாயாசம் சமையல் | Kirni Pazham Payasam recipe | Kirni pazham benefits in tamil

இந்த கிர்ணி பழத்தை முலாம் பழம் என்றும் அழைப்பார்கள். கிர்ணி பழம் சருமத்திற்கு நிறம் கொடுக்கும். உடல் சூட்டைத் வேகமாக தணிப்பதில் இதற்க்கு இணை வேறு எதுவுமே இல்லை. இந்த கிருணி பழத்தை வைத்து எளிய வகை பாயாசம் செய்வது எப்படி என காண்போம். 

கிர்ணி பாயாசம் செய்ய தேவையான பொருட்கள்:

  1. கிர்ணி பழம் - 2 கப்
  2. கொதிக்க வைத்த பால் - 1 கப் 
  3. கன்டென்ஸ்டு மில்க் - 1/2 கப் 
  4. முந்திரி பருப்பு - சிறிதளவு 
  5. ஏலக்காய் தூள் - 1/2 தேக்கரண்டி
முலாம் பழம், கிர்ணி பழம் பாயசம், Kirni Payasam Recipe in tamil, Musk Melon, kirni pazham juice benefits, udal soodu kuraiya, kaan erichal, vayiru porumal

செய்முறை:

ஒரு மிக்சியில் கிருணி பழத்தை சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் அரைத்த கிர்ணி பழம், தேவையான அளவு பால், கன்டென்ஸ்டு பால் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்துகொள்ளவும். நன்றாக கலந்ததும் அதில் ஏலக்காய் பொடி சேர்த்து கலக்கவும். பிறகு அதில் வருத்த முந்திரி பருப்பை சேர்த்து நன்றாக கலந்து பரிமாறவும்.

கிர்ணி பழத்தினால் கிடைக்கும் நன்மைகள்:


உடல் சூட்டைத் வேகமாக தணிக்கும்.

உடல் சூட்டினால் கண் எரிச்சல், கண் நோய் ஏற்படலாம். இதற்கு தினமும் இரண்டு கிர்ணிப்பழ துண்டுகளை நாட்டு சர்க்கரை சேர்த்து சாப்பிடுங்கள். கண்கள் பிரகாசிக்கும்.

கிர்ணிப்பழ விழுதுடன் உப்பு, இஞ்சிச்சாறு, சிறிது சீரகம் சேர்த்து சாப்பிட்டால் வயிற்றுப் பொருமல், எரிச்சல், குடல் நோய் குணமாகும்.

கிர்ணி விதை பவுடரை தேனில் கலந்து சாப்பிட்டால் வயிற்றுப் பூச்சிகள் நீங்கும். 

முலாம் பழம், கிர்ணி பழம் சருமத்திற்கு நிறம் கொடுக்கும், கிர்ணி பழ பாயசம் [Kirni Payasam Recipe in tamil] , kirni palam in tamil, kirni palam juice recipe, Musk Melon, kirni pazham recipe, kirni pazham juice, kirni fruit benefits in tamil, kirni palam juice benefits, udal soodu kuraiya, kaan erichal, vayiru porumal, erichal pokkum kiruni pazham, iyarkai unavugal samayal, natural cooking in tamil