Type Here to Get Search Results !

ஒரு வீட்டிற்கு விருந்தினராக செல்லும் பொழுது நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய 14 விதிமுறைகள்..!

உறவினர் வீட்டிற்க்கு செல்லும் முன் கவனிக்க வேண்டியவை..

1. உறவினர் வீட்டிற்கோ அல்லது நண்பர் வெட்டிற்கு விருந்தினராக செல்ல தீர்மானித்தால் முன்கூட்டியே இன்ன நாள் இத்தனை மணிக்கு வருகிறேன் என்று கூறிவிட்டு போவது நல்லது. திடுதிப்பென அவர்கள் எதிர்பாராத விதமாக போய் நிற்ப்பதை தவிர்க்க வேண்டும்.
uravinar veetirkku sellum mun therindhukolla vendiyavai, payanulla kurippugal, veetu kurippugal in tamil

2. ஒருவர் வீட்டிற்கு போகும் பொழுது உங்களது எல்லா குழந்தைகளையும், உறவினர்களையும் அழைத்துக்கொண்டு போகவேண்டாம்.



3. கூடியவரை ஒருவரது வீட்டிற்கு மாலை நேரத்தில் போவது சிறந்தது.

4. நீங்கள் போகும் பொழுது நீங்கள் போன வீட்டுக்காரர்கள் வெளியே எங்காவது புறப்பட்டுக் கொண்டிருந்தால் குறிப்பறிந்து சீக்கிரமாக திரும்புவதுதான் நாகரீகம்.

5. ஒருவர் வீட்டுக்கு கடனோ, இரவலோ வாங்க சென்றால் ஊர் கதைகளை எல்லாம் பேசிவிட்டு கடைசியில் வந்த விசயத்தை சொல்வது என இல்லமால் உடனடியாக கேட்க்க வேண்டிய முறைகளில் கேட்டு விடுவது நல்லது.

6. ஒரு பிஸ்கட் பாக்கெட், கொஞ்சம் பழங்கள் வாங்கிகொண்டு போவதுதான் முறை. அடிக்கடி செல்லும் வீடு என்றால் தேவையில்லை.

7.விடை பெற்றுக்கொண்டு திரும்பும்பொழுது நீங்கள் போன வீட்டுக்காறரை உங்கள் வீடிற்கு வரும்படி அழையுங்கள். சிலர் தங்கள் பிறை வீடிற்கு போவதையே லட்சியாமாக வைத்திருக்கிறார்களே தவிர ஒருவரையும் தங்கள் வீடிற்கு அழைப்பது இல்லை.

8. குழந்தைகளுக்கு ஜலதோஷம், சளி, இருமல் போன்ற உடல் நலம் சரியில்லாத வேளைகளில் அவர்களை அங்கே அழைத்துசெல்ல வேண்டாம்.

9. போன இடத்தில் ஏதாவது புத்தகங்களையோ, பத்திரிக்கைகளையோ பார்த்தல் உடனே இரவல் கேட்பது போன்ற அநாகரிகமான செய்யல வேறு எதுவும் கிடையாது.   

10. உங்கள் குழந்தைகளை உங்கள் அருகிலேயே உட்கார வைத்துகொள்ளுங்கள். உங்கள் குழந்தைகள் போன இடத்தில் சோபா மீது எற்றி நிற்பது, ரேடியோ டிவியை மாற்றுவது, அவர்களுடைய செல்போனை எடுத்து நோண்டுவது போன்ற செயல்களை செய்ய அனுமதிக்காதீர்கள்.

Read: வீ ட்டிற்கு விருந்தாளி வந்தால் எப்படி உபசரிக்க வேண்டும்? - 13 விருந்து உபசரிப்பு வழிகள்.. 

11. சாதரணமாக இன்னொருவர் வீடிற்கு போனால் தேவையில்லாத ஆடம்பர உடைகளையோ, நகைகளையோ அணிந்துகொண்டு செல்ல வேண்டாம்.   

12. இன்னொருவர் வீட்டில் சாப்பிட சொன்னால் சாப்பிடும் பொழுது அளவாக சாப்பிட வேடும், மேலும் சாப்பிடமால் இலையிலோ தட்டிலோ உணவை மீதி வைப்பது நல்லதல்ல.

13. சாப்பிடும் பொழுது வாயிலிருந்து சத்தம் அதிகமாக வராத அளவிற்கு சாப்பிட வேண்டும். பொதுவாக உணவை மெல்லும் பொழுது வாயை மூடி கொண்டு மென்றால் சத்தம் வராது மேலும் வாய் மூடி மேல்லுவதல் உணவு எளிதாக ஜீரணமாகும்.

14. இலையில் சாப்பிட நேர்ந்தால் சாப்பிட்டு முடிந்ததும் இலையை உன்கள் பக்கமாக மடிக்க வேண்டும்.    
uravinar veetirkku sellum mun therindhukolla vendiyavai, payanulla kurippugal, veetu kurippugal in tamil, lifestyle tips in tamil, vazhkai  nerimuraigal, vaazhviyal