Type Here to Get Search Results !

வீ ட்டிற்கு விருந்தாளி வந்தால் எப்படி உபசரிக்க வேண்டும்? - 13 விருந்து உபசரிப்பு வழிகள்..

விருந்தாளிகளை உபசரிக்க 13 எளிய வழிகள்.. {virundhali virundhu ubasarippu valimuraigal}


வீட்டிற்கு வந்திருக்கும் விருந்தாளிகளை எப்படி உபசரிக்கிரோமோ அதை பொறுத்தே அவர்கள் நம்முடன் வைத்திருக்கும் மதிப்பும், மரியாதையும், நல்லுறவும் நிலைத்திருக்கும். சில பேர் தங்களது வீட்டிற்கு வரும் விருந்தாளிகளை உபரிக்கும் வழிதெரியாமல் ஏதோ ஒரு தவறை செய்துவிட பிற்காலத்தில் அதுவே அவர்களின் நட்புறவையும், தொடர்பையும் துண்டித்துவிட காரணமாய்  அமைந்துவிடும். அப்படி ஏதும் நேராதிருக்க, கீழே கொடுக்கபாடுள்ள சில வழிமுறைகளை பின்பற்றினால் உறவினர்கள், விருந்தாளிகளிடம் உங்கள் நடப்பு சிறப்புற்றிருக்கும்.
13 Virundhu ubasaraipu kurippugal, virundhali virundhu ubasarippu valimuraigal, lifestyle tips in tamil, veettu kurippugal, vazhkkai virundhu, uravu sirakka


1. வீட்டிற்கு விருந்தினர் வந்திருக்கும் பொழுது பாடும் ரேடியோவையோ, டிவியையோ உடனே நிறுத்துங்கள்.

2. ஒருவருக்கு மேல் விருந்தாளியாக வந்திருந்தால் வந்திருப்பர்களில் ஒருவரிடம் மட்டுமே பேசிக்கொண்டு இருக்காமல் எல்லோரிடம் பேசுங்கள்.

3. உங்கள் வீட்டில் நாய் வளர்த்தீர்கலானால் அது வந்திருப்பவர்கள் மீது தாவி விளையாடாமல் தடுங்கள். விருந்தினர்கள் வந்திருக்கும் வேளையில் நாய்களை கட்டி வைப்பது நாகரீகம்.

4. விருந்தினர்களின் குழந்தைகளுடன் கொஞ்சுங்கள்.

5. நீங்களே பேசிக்கொண்டு இருக்காதீர்கள் அவர்களுக்கும் பேச இடம் கொடுங்கள்.

6. வந்தவர்களிடம் உங்கள் குறையை சொல்லிக்கொண்டு இருக்கவேண்டாம்.

7. வந்தவர்கள் பேசுவதை கவனாமாக கேளுங்கள்.

Read: ஒரு வீட்டிற்கு விருந்தினராக செல்லும் பொழுது நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய 14 விதிமுறைகள்..! 

8. வந்தவர்கள் காப்பியோ டிபனோ சாப்பிட கொடுத்தால் அவர்கள் சாப்பிட்ட உடனே பாத்திரத்தை, இலையை எடுத்து சென்று விடுங்கள், அவர்களை வழியனுப்பும் வரை பாத்திரங்கள் அங்கேயே இருக்க வேண்டாம்.

9. விருந்தாளிகள் புறப்படும் பொது வாசல் வரை சென்று வழியனுப்பி வையுங்கள்.

10. சுமங்கலி பெண்ணோ, திருமணம் ஆகாத பெண்களோ உங்கள் வீட்டுக்கு வந்து புறப்படும் பொது ஞாபகமாக குங்குமம் கொடுங்கள்.

11. புன்முறுவலுடன் இருங்கள். வீட்டில் மற்றவர்களுடன் மனஸ்தாபத்துடன் இருந்தால் அது வந்தவர்களுக்கு தெரியாமல் நடந்து கொள்ளுங்கள்.

12. வந்தவர்களுக்கு எது விசயமாக பேச பிடிக்கிறதோ அதுவிசயமாக பெசிக்கொண்டிருங்கள்.

13. விருந்தாளிகள் கூறும் அபிப்ராயங்களுக்கு மதிப்பு கொடுங்கள். அவர்கள் கூறுவது தவறு என்று எக்காரணத்தை கொண்டும் வாதிடாதிர்கள். virundhali virundhu ubasarippu valimuraigal, lifestyle tips in tamil, veettu kurippugal, vazhkkai virundhu, uravu sirakka vazhigal, uravinar, relatives strong relationship maintain tips,